ஜெயலலிதா பிறந்தநாள் விழா அதகளம்

தண்ணீரில் மிதந்த எம்.எல்.ஏ... அலகு குத்து... ஃப்ளெக்ஸ்... பால் காவடி... பிரியாணி!

முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் அட்ராசிட்டி அடங்கிப் போயிருக்கும் நிலையில், வளர்ப்பு மகன் திருமணத்துக்கு இணையாக, மதுரை அ.தி.மு.க-வினர், ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடித் தீர்த்தனர். எதிலும் வித்தியாசமாகக் காட்டிக்கொள்ளும் மதுரை
அ.தி.மு.க-வினர் பண்ணிய அட்ராசிட்டி கொஞ்சநஞ்சமல்ல. அதிலும், அம்மாவுக்காக விழா எடுப்பதைத் தனது முழுநேர வேலையாக வைத்திருக்கிறார் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு. “அவர் மட்டும்தான் பெரிய ஆளா, அவருக்குப் போட்டியா நாங்களும் நடத்துவோம்ல?” என்று மேயர் ராஜன் செல்லப்பா கோஷ்டியினரும் களத்தில் இறங்க, கடந்த ஒரு வாரமாக மதுரை மதுரையாக இல்லை.

மாவட்டத்தைப் போர்வையால் மூடியதுபோல ஃப்ளெக்ஸ்களால் மூடிவிட்டனர். வீடுகளில் குடியிருப்பவர்கள், கடைக்காரர்கள் எல்லோரும் மிகுந்த சாகசத்துடன் சாலைகளில் ஃப்ளெக்ஸ்களுக்குள் புகுந்துவரப் பழகிவிட்டனர். கடந்த 22-ம் தேதி, அமைச்சர் செல்லூர் ராஜு ஏற்பாட்டில் பால்குடம், பறவை காவடி ஊர்வலம் பிரமாண்டமாக நடந்தது. காலை நான்கு மணிக்கெல்லாம் வைகை ஆற்றில் களம் இறங்கிய அவர், பூசாரியாக அவதாரம் எடுத்தார். சிறப்பு பூஜைகளைச் செய்தவர், பெண்களுக்குக் குடங்களையும் பால் பாக்கெட்டுகளையும் எடுத்துக்கொடுத்தார். பால் குடத்தோடு யாரும் எஸ்கேப் ஆகிவிடக் கூடாது என்பதால், தடுப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். அலகு குத்த வந்தவர்களுக்கு அமைச்சரே அலகு குத்திவிட்டார். வலியில் ஒருவர், அரோகரா என்பதற்கு பதில் ‘அம்மா’ என்று கதற அமைச்சர் முகத்தில் புன்னகை. “நம் மக்களுக்கு எப்போதும் அம்மா நினைவுதான்” என்று அருகில் இருந்தவர்களிடம் பூரித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்