“கலையும் அரசியல்தான்... கல்வியும் அரசியல்தான்!

டி.ராஜா எம்.பி. மகள் அபராஜிதா ஆவேசம்

ந்திய அரசியலில் புயலாய் வீசிக்கொண்டிருக்கிறது ஜே.என்.யூ விவகாரம். டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் எட்டுப் பேர் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிரான போராட்டத்தில், முன்னணியில் இருப்பவர் அபராஜிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய துணைப் பொதுச்செயலாளரான டி.ராஜா எம்.பி-யின் மகளான அபராஜிதா, ஜே.என்.யூ-வில் படித்து வருகிறார். இவர் மீதும் தேசத்துரோக வழக்குப் பதியப்பட்டுள்ளது. அபராஜிதாவிடம் பேசினோம். 

“என்ன நடக்கிறது ஜே.என்.யூ-வில்?”

“நாடாளுமன்றத் தாக்குதல் விவகாரத்தில், அப்சல்குரு தூக்கிலிடப்பட்ட தினமான பிப்ரவரி 9-ம் தேதி, தூக்குத் தண்டனைக்கு எதிரான கருத்தரங்கத்துக்கு ஏ.ஐ.எஸ்.எஃப் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்) ஏற்பாடு செய்தது. ஒரு வாரத்துக்கு முன்பே கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி வாங்கப்பட்டது. ஆனால், அந்த நிகழ்ச்சிக்கு அனுமதி தரக் கூடாது என்று 9-ம் தேதி காலையில், பி.ஜே.பி-யின் மாணவர் பிரிவான ஏ.பி.வி.பி சார்பில், துணைவேந்தருக்கு ஒரு கடிதம் கொடுக்கப் பட்டது. நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று செக்யூரிட்டிகள் சொன்னார்கள். மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.ஒலிபெருக்கி, வெளிச்சம் என எதுவும் இல்லாமல் நிகழ்ச்சியை நடத்தினோம். அப்போது, ஏ.பி.வி.பி-யினர் வந்து எங்களுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதற்காகத்தான், கண்ணையா குமார் உள்ளிட்டோர் மீது தேசத்துரோக வழக்குப் போடப்பட்டுள்ளது. 25 மாணவர்கள் பல்கலைக்கழகத்தில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். கடைசியில் இதை, லஷ்கர் இ தொய்பா-வுடன் தொடர்பு என்று சித்தரிக்கும் அளவுக்குப் போய்விட்டார்கள்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்