“சாத்தான் ஒரு பக்கம்... ஆழ்கடல் மறுபக்கம்!”

பா.ம.க. மாநாட்டில் விளாசிய அன்புமணி

புதிய மாற்றத்துக்கான தங்களது முதல் அடியை பா.ம.க எடுத்து வைத்துள்ளது. அந்தக் கட்சியின், ‘ஆட்சி மாற்றத்துக்கான மாநில மாநாடு’ வண்டலூரில் 27-ம் தேதி நடந்தது. 80 அடி நீளம் 60 அடி அகலத்தில் மேடை அமைத்தி ருந்தார்கள். மேடை இரண்டாகப் பிரிக்கப்பட்டு வலதுபக்கத்தில் மட்டுமே இருக்கைகள் போடப்பட்டன. இடதுபுறம் காலியாகவே இருந்தது. அதில், பெரிய எல்.ஈ.டி ஸ்க்ரீன், நெக்ஸோ ஸ்பீக்கர்கள் என டெக்னிக்கலாக அசத்தியிருந்தனர். 

‘அசைவம்’ நீக்கிய காடுவெட்டி குரு!

 காடுவெட்டி குரு மைக் பிடித்ததுமே கூட்டத்தினரின் ஆரவாரம் காதைக் கிழித்தது. “அன்புமணி இங்கிருந்து பொத்தானில் கட்சிக் கொடியை ஏற்றியபோது, சூரியன் மேற்கே மறைந்து கொண்டிருந்தது. அதைப்போல, இப்போது அந்தத் திராவிடக் கட்சியும் மறையப் போகிறது. அரசாங்கம் அமைக்க வேண்டிய பள்ளிக்கூடங்களைத் தனியார் முதலாளிகளுக்குக் கொடுத்துவிட்டு, தனியார் நடத்தவேண்டிய சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்திக்கொண்டிருக்கிறது. ஆண்ட முதலமைச்சரும், ஆண்டுகொண்டு இருக்கிற முதலமைச்சரும் தினம்தோறும் சாராய வரவுசெலவு பார்க்கும் வேலையைத்தானே செய்கின்றனர். இதைவிட கேவலம் இந்த நாட்டுக்கு என்ன இருக்கிறது? அ.தி.மு.க ஆட்சியின் ஓராண்டு சாதனை நூறாண்டு சொல்லும் என்று சொன்னார்கள்.

இட்லி விற்றதும், வடை சுட்டு விற்றதும், ஆப்பம் விற்றதுமா சாதனை? ‘அம்மா ஆடு கொடுத்தாங்க… மாடு கொடுத்தாங்க... நான் பன்னி கொடுக்கிறேன். எல்லாம் மேயுங்க…’ என்று சொல்வார் கலைஞர். ‘சாதிமத பேதமற்ற ஆட்சி அமைப்போம்’ என்று 1952-ல் நீங்களும் அண்ணாவும் பேசினீர்களே, இன்று யாராவது சாதிப் பெயரைச் சொல்லாமல் இருக்கிறார்களா? எங்களைப் பார்த்து சாதிக் கட்சி என்று சொல்கி றார்கள். இது ஒரு வித்தியாசக் கட்சி” என்றார் குரு. அவர் தனது பேச்சில் ‘அசைவம்’ நீக்கியதே பெரிய மாற்றம்தான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்