“மிஸ்டு கால் கொடுத்தால் வேட்பாளர் ஆகலாம்!”

‘புதிய சக்தி அணி’ அறிவிப்பு

ழை நேரத்தில் முளைக்கும் காளான்கள்போல, தேர்தல் நேரத்தில் புதிய அமைப்புகளும், புதிய கட்சிகளும் தொடங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பல சாதிய அமைப்புகள் மாநாடுகள், கூட்டங்கள் என புறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு போன்ற கொள்கைகளுக்காகச் செயல்பட்டு வரும் சட்டப் பஞ்சாயத்து இயக்கம் உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து ‘புதிய சக்தி அணி’ என்ற பெயரில் ஒரு புதிய அணியை உருவாக்கி இருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தொடங்கப்பட்ட இந்த அணி, வரும் சட்டசபைத் தேர்தலில் களம் இறங்கத் தயாராகி வருகிறது. சட்டப் பஞ்சாயத்து இயக்கம், தமிழக ஸ்தாபன காங்கிரஸ், காந்திய சமதரும இயக்கம் உட்பட 52 இயக்கங்களை உள்ளடக்கி இந்த அணி அமைக்கப்பட்டுள்ளது.
சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் மாநிலத் தலைவர் சிவ.இளங்கோ, மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் ஆகியோரிடம் பேசினோம். “ஊழலற்ற ஆட்சி, லஞ்சமில்லாத நிர்வாகம், மது இல்லாத தமிழகம் ஆகியவற்றை முன்னிறுத்தி இந்தத் தேர்தலைச் சந்திக்கிறோம். எங்களது புதிய சக்தி அணி, அரசியல் சார்பற்றது. இதுவரை 52 அமைப்புகள் இணைந்துள்ளன. எங்கள் அணியில், அரசியல் தூய்மை என்ற கொள்கையுடைய எந்த அமைப்பு வேண்டுமானாலும் மார்ச் 10-ம் தேதி வரை சேரலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்