விளம்பரங்களால் மக்கள் ஏமாற மாட்டார்கள்!

நல்லகண்ணு நம்பிக்கை

கார்பரேட் நிறுவன அதிபர்களைப்போல, அரசியல் கட்சித் தலைவர்கள் வலம் வரும் இன்றைய காலகட்டத்தில்,  எளிமையோடும், கண்ணியத்தோடும், கொள்கை உறுதியோடும் மக்கள் நலனுக்கான அரசியல் நடத்திக்கொண்டிருப்பவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இன்றைய அரசியல் மற்றும் சட்டமன்றத் தேர்தல் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“மக்கள் நலக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பு இருக்கிறது?”

“இதுபோன்ற அணிதான் அதிகாரத்துக்கு வரவேண்டும் என்று நடுநிலையாளர்கள் விரும்புகிறார்கள். காரணம், இன்றைய ஆட்சியாளர்கள் விலைவாசியைக் கட்டுப்படுத்தவில்லை. மத்திய அரசு மதவாதப் போக்குடன் செயல்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தரைவார்க்கிறார்கள். தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரு திராவிடக் கட்சிகளின் மீதும்  ஊழல் வழக்குகள் உள்ளன. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றன. ஆனால், மக்கள் பிரச்னைகளை இவர்கள் தீர்க்கவில்லை. இந்த இருவரது ஆட்சிகளிலும் இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன. எனவே, ஒரு புதிய மாற்று வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சி மாற்றம் அல்ல... ஆள் மாற்றம் அல்ல... கொள்கை மாற்றம் வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இது தேர்தலுக்காக ஏற்பட்ட கூட்டணி அல்ல. மக்களின் அடிப்படைப் பிரச்னை களைப் பேசுகிற, அதற்காகப் போராடுகிற கூட்டணி இது. அந்த நம்பிக்கை மக்களிடம் ஏற்பட்டுள்ளது என்பதைப் பார்க்கிறேன். மக்கள் நலக் கூட்டணியால் மட்டுமே ஒரு சிறந்த மாற்றத்தைக் கொண்டுவர முடியும்.”

“அ.தி.மு.க-வின் ‘பி’ டீம் என்று மக்கள் நலக் கூட்டணியை தி.மு.க-வினர் விமர்சிக்​கிறார்களே?”

“அ.தி.மு.க., தி.மு.க ஆகிய இரு கட்சிகளையுமே நாங்கள் எதிர்க்கிறோம்.

அ.தி.மு.க ஆட்சியின் ஊழலில் ‘பி’ டீம் ஆக தி.மு.க உள்ளது என்றும், தி.மு.க ஆட்சியின் ஊழலில் ‘பி’ டீம் ஆக அ.தி.மு.க உள்ளது என்றும் எங்கள் அணியின் தலைவர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். எங்கள் அணி, கொள்கை ரீதியில் போராடக்கூடிய அணி. இவர்கள் இருவருமே வரக் கூடாது என்பதுதான் எங்களின் நோக்கம். நடுநிலையாளர்களின் விருப்பம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்