விவசாயிகள் எதிர்பார்க்கும் தேர்தல் கோரிக்கைகள்!

இலவச சோலார் மின்சார உற்பத்தி...விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்...விவசாயத்துக்கு தனி பட்ஜெட்...

ட்டசபைத் தேர்தல் நெருங்கிவரும் நேரம் விவசாயிகள் கோரிக்கைகள்வைப்பது வழக்கமான நிகழ்வு. “சுதந்திரம் பெற்று ஆண்டுகள் பல ஆகியும், எங்களின் நிறைவேறாத கோரிக்கைகள் வண்டி வண்டியாக உள்ளன. வரும் தேர்தலிலாவது அவை நிறைவேறுமா?” என்று கேள்வி எழுப்புகின்றனர் விவசாயிகள். அவர்களின் கோரிக்கைகள்தான் என்ன?

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர், பேராசிரியர் தர்மபுரி சின்னசாமி:

“பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் போடுவதுபோல விவசாயத்துக்கும் தனியாக பட்ஜெட் போடவேண்டும். இயற்கைச் சீற்றங்கள், வறட்சி, நோய் தாக்குதல் போன்ற காரணிகளால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உதவும்விதமாக இயற்கைப் பேரிடர் நிதியம் தொடங்க வேண்டும். விவசாய பம்ப்செட்களுக்கு விண்ணப்பம் கொடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் இலவச மின் இணைப்பு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள் இணைப்புத் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ள உபரி நீரை வறட்சிப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல முடியும்.

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் வேளாண் பாடத்தைக் கற்றுத்தர வேண்டும். அதற்காக வேளாண்மை பட்டதாரிகளை ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும். விவசாயப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ‘விளைபொருள் விலை நிர்ணய ஆணையம்’ ஒன்றை மாநில அரசு உருவாக்க வேண்டும். கிராமப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பிகள் துருப்பிடித்த நிலையில் உள்ளதால், சீரான மின் விநியோகம் கிடைப்பது இல்லை. இதனால், பம்ப்செட் மோட்டார்கள் அடிக்கடி பழுதாகிவிடுகின்றன. எனவே, கிராமப்புறங்களில் புதிய மின்கம்பிகளை அமைக்கவேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்