மிஸ்டர் கழுகு: விஜயகாந்துக்காக காத்திருக்கும் ஜெயலலிதா!

‘‘தமிழக அரசியல் கூட்டணி முடிவுகள் அனைத்தும், விஜயகாந்த் உதிர்க்கும் வார்த்தைகளுக்குள் அடங்கி இருக்கிறது” என்ற பீடிகையுடன் வந்தார் கழுகார்.

‘‘விஜயகாந்த்துடன் பேச்சுவார்த்தை நடத்த 24 மணி நேர பயணமாக வந்த மத்திய அமைச்சரும் தமிழக பி.ஜே.பி தேர்தல் பொறுப்பாளருமான பிரகாஷ் ஜவடேகர், மீனம்பாக்கம் விமான​நிலையம் அருகில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். 27-ம் தேதி மாலையில் இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் பாரிவேந்தர், அனைத்திந்திய முஸ்லிம் முன்னேற்ற கழகத் தலைவர் சதக்கத்துல்லா, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் தேவநாதன் ஆகியோர் அவரைச் சந்தித்தனர். இவர்கள் எல்லாம் ஹோட்டலுக்கு வந்து சந்தித்தார்கள். ஆனால், சரத்குமாரை வீடு தேடிச் சென்று சந்தித்துள்ளார் ஜவடேகர்.’’

‘‘சரத், தேவநாதன் நீங்கலாக, மற்றவர்கள் எல்லாம் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இருந்தவர்கள்​தானே?”

‘‘ஆமாம். இருந்தாலும், முறைப்படியான சந்திப்பு நடக்க வேண்டாமா? அதனால்தான் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஜவடேகரை சந்தித்த கூட்டணிக் கட்சி தலைவர்கள், ‘சட்டமன்றத் தேர்தலிலும் கூட்டணி தொடர்கிறது. விரைவில் தொகுதி உடன்பாடு, பங்கீடு குறித்துப் பேசுவோம்’ என்று சொன்னார்கள்.’’

‘‘கூட்டணித் தலைவர்களை ஜவடேகர் சந்தித்து கொண்டிருந்தபோது, விஜயகாந்த் அவரது கட்சி மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தைக் கூட்டி இருந்தாரே?”

‘‘ஆமாம். அப்போது பல விஷயங்களை மாவட்டச் செயலாளர்களிடம் விஜயகாந்த் சொல்லி இருக்கிறார். ‘தி.மு.க-வில் 104 சீட்கள், துணை முதல்வர், அமைச்சரவையில் பங்கு என்று நமது கோரிக்கைகளை முன்வைத்தோம். கடந்த முறை அ.தி.மு.க-வோடு கூட்டணிவைத்து அவர்கள் ஜெயித்த பிறகு நம்மை மறந்து​விட்டார்கள். எனவே, சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும் 50 சதவிகித இடங்களைக் கேட்டோம். இந்தக் கோரிக்கைகளில் ஒன்றைக்கூட தி.மு.க ஏற்கவில்லை. ஆனால், நீங்கள் தி.மு.க கூட்டணி வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், அவர்களுக்கு நாம் வேண்டும் என்றால், இந்தக் கோரிக்கைகள் குறித்து ஒரு முடிவுக்கு வராமல் இழுத்தடிப்பது ஏன்? உங்களைக் கூட்டணிக்கு வருமாறு அழைக்கும் உங்கள் ஏரியா தி.மு.க மாவட்டச் செயலாளர்களிடம், கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை முடிவடையாததற்கு தி.மு.க-தான் காரணம் என்று சொல்லுங்கள்’’ எனச் சொல்லி இருக்கிறார் விஜயகாந்த்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்