நத்தம் விசுவநாதனுக்கு செக்!

அதானி குழுமத் தொடர்பு காரணமா?

த்தம் விசுவநாதன் ஓரம்கட்டப்படுவதுதான் அ.தி.மு.க-வின் இப்போதையை ஹாட் டாபிக். விசுவநாதனின் ஆதரவாளரும் திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரச் செயலாளருமான மாரியப்பனின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது. இதனால், அடுத்து என்ன நடக்குமோ என நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டிருக்கிறது.

இப்போது, திண்டுக்கல் மாவட்டத்தில் அ.தி.மு.க-வின் முகமாக இருப்பவர் அமைச்சர் நத்தம் விசுவநாதன். நத்தம் யூனியன் சேர்மனாக அரசியல் பயணத்தைத் தொடங்கிய விசுவநாதன், அமைச்சரவையில் மூன்றாம் இடம்பிடிக்கும் அளவுக்கு வளர்ச்சியடையக் காரணம் தலைமையிடம் காட்டிய பணிவும், விசுவாசமும்தான். பெங்களூரு சிறையில் ஜெயலலிதா இருந்தபோது, அடுத்த முதலமைச்சர் யார் என்பதற்கான பட்டியலில் விசுவநாதன் பெயரும் இடம்பெறும் அளவுக்கு செல்வாக்குடன் இருந்தார். இப்போது அவரை மையமாகவைத்து நடந்தேறும் சில செயல்கள் மூலமாக, கட்சியில் அவரைக் கட்டம் கட்டும் வேலை நடந்துவருவதாகச் சொல்கிறார்கள். அதன் விளைவாகத்தான் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டிருக்கிறார்களாம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி நகரச் செயலாளர் மாரியப்பன். அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் கண்டக்டராகப் பணியாற்றி, அண்ணா தொழிற்சங்கப் பதவியின் மூலமாகத் தன்னை வளர்த்துக்கொண்டவர். பதவி கிடைத்தபிறகு, வருங்கால எம்.எல்.ஏ ரேஞ்சுக்கு மாரியப்பனின் செயல்பாடுகள் மாறிப்போயின. இதன் விளைவாக, கார்டனுக்குப் புகார்கள் பறந்ததை அடுத்து சில தினங்களுக்கு முன்பாக, நகரச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. விசுவநாதனின் ஆதரவாளரான இவரது பதவி பறிக்கப்பட்டது திண்டுக்கல் அ.தி.மு.க-வினர் மத்தியில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்