பெரியோர்களே... தாய்மார்களே! - 68

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

சென்னை மாநகரே ஆந்திராவுக்குப் போயிருந்தால்...? நினைக்கவே நெஞ்சு அடைக்கிறது! தமிழ்நாடு தலை இல்லா நாடாக இருந்திருக்கும்.

‘மதராஸ் மனதே’ - என்பதுதான் ஆந்திரர்கள், தெலுங்கு மொழி பேசும் மக்கள் வைத்த முழக்கம். மொழிவாரி  மாகாணம் பிரிக்கப்பட வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்துப் போராட்டம் தொடங்கிய அவர்களுக்கு பொட்டி  ஸ்ரீராமுலுவின் உண்ணாவிரதம் உணர்ச்சியைத் தூண்டுவதாக அமைந்தது. 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து பொட்டி ஸ்ரீராமுலு இறந்துபோனார். அவர் பெயரால் சென்னை மயிலாப்பூர் லஸ் முனையில் இன்றும் நினைவகம் இருக்கிறது. இதன்பிறகு, உடனடியாக ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று பிரதமர் நேரு அறிவித்தார். அது 1953-ம் ஆண்டு அக்டோபர் மாதம்.

தெலுங்கு மொழி பேசும் மக்கள் தங்களுக்கென மாநிலம் அமைய வேண்டும் என வாதாடியதும் உயிர் கொடுத்துப் போராடியதும் போற்றத்தக்க நடவடிக்கைதான். மொழியே விழி என்பதை முதலில் உணர்ந்தார்கள். ஆனால், ‘சென்னையும் எங்களுக்குத்தான்’ என்று சொல்ல ஆரம்பித்ததுதான் விபரீதத்தின் தொடக்கம். இதைத் தடுத்து சென்னையை தமிழ்நாட்டுக்குத் தக்க வைக்க மூன்று பேர்தான் முக்கியக் காரணம். முதலாமவர் ம.பொ.சி. இரண்டாமவர் அன்றைய சென்னை மேயர் செங்கல்வராயன். மூன்றாமவர் சென்னை மாகாண முதல்வர் ராஜாஜி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்