மிஸ்டர் கழுகு: ஈழத்தாய் இமேஜ்!

கூட்டணி ஏற்பாடுகளில் என்ன நடக்கிறது என்பதைச் சொல்லும்!” - கழுகார் தலை தெரிந்ததும் கொக்கி போட்டோம்.

‘‘இன்னும் கலங்கலாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்தத் திசையை நோக்கிப் போகும் என்பது மட்டும் லேசாகத் தெரிய ஆரம்பித்திருக்கிறது. தி.மு.க கூட்டணிக்கு விஜயகாந்த் வருவது உறுதிப்படுத்தப்பட்டு விட்டது. 50 தொகுதிகளா, 55 தொகுதிகளா என்பது இன்னமும் முடிவாகவில்லை. இந்த எண்ணிக்கையைவிட உள்ளாட்சித் தேர்தல் பற்றித்தான் கேள்விகளால் துளைக்கிறாராம் விஜயகாந்த். எழுதித் தருவதற்கு வாய்ப்பு இல்லை என்றும், 25 சதவிகித இடங்கள் வரை தரலாம் என்றும் தி.மு.க தரப்பு சொல்லி இருக்கிறது. இவை அனைத்தும் மேலோட்டமாக நடக்கும் பேச்சுவார்த்தைகள்தான். ‘இது தேய்பிறை... வளர்பிறை வந்தபிறகு முடிவெடுத்துக்கொள்ளலாம்’ என்று விஜயகாந்த் சொல்லி வருகிறார். அவரது கட்சி மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ-க்கள் இப்போதே தி.மு.க பிரமுகர்களிடம் தங்களது நட்பை புதுப்பிக்க ஆரம்பித்து உள்ளார்கள்.”

‘‘ஆனாலும் பி.ஜே.பி படையெடுப்பு தொடர்கிறதே?”

‘‘ஆமாம். அவர்கள் எப்படியாவது விஜயகாந்த்தை தங்கள் கூட்டணிக்குக் கொண்டுவரத் துடிக்கிறார்கள். விஜயகாந்த் வராவிட்டால் தேர்தலைச் சந்திப்பதே சிக்கலாக இருக்கும் என்று பி.ஜே.பி நினைக்கிறது. விஜயகாந்த் பிடியே கொடுக்கவில்லை. ‘உங்களுக்கு இப்போதுதான் என்னைத் தெரிகிறதா? ஜெயலலிதா கூட்டணி கிடையாது என்று சொன்னபிறகு என்னிடம் வருகிறீர்களா? நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க-வை மதித்தீர்களா?, ஜெயலலிதாவை பார்க்க மோடியும் அருண்ஜெட்லியும் வருவார்கள்... என்னைப் பார்க்க ஜவடேகர்தான் வருவாரா?... என்றெல்லாம் விஜயகாந்த் கேட்கும் எந்தக் கேள்விகளுக்கும் பி.ஜே.பி தரப்பால் பதில் சொல்ல முடியவில்லை. தேர்தல் தேதி அறிவித்த பிறகுதான் இறுதிக்கட்ட நகர்வுகள் இருக்கும்!”

‘‘ம்’’

‘‘கடந்த வாரம் ஜவடேகர் வந்தார். அப்போது தனியார் ஹோட்டலில் தங்கி இருந்தார். அவர் சரத்குமாரின் வீட்டுக்குப்போய் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றபோது ஹோட்டலுக்குக் கீழே பத்திரிகையாளர்கள் காத்திருந்தார்கள். அவர் யாருக்கும் தெரியாமல் ஹோட்டலின் பின்வாசல் வழியாகப் போய்விட்டார். ‘ஒரு மத்திய அமைச்சர் இப்படி நடந்துகொள்ளலாமா?’ என்று பத்திரிகையாளர்கள் அப்போதே பாய்ந்தார்கள். 3-ம் தேதி மீண்டும் தமிழகம் வந்தார் ஜவடேகர். விமானநிலையத்தில் இருந்து பயணிகள் வெளியில் வரும் பாதையில் வராமல், உள்ளே செல்லும் பாதை வழியாக வெளியில் வந்தார். ஜவடேகர் சென்னைக்கு வந்ததே மாநிலத் தலைவரான தமிழிசைக்குத் தெரியாதாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்