“இளைஞர்கள் கேட்டுக்கொண்டதற்காகவே கட்சியைத் தொடங்கினேன்!”

கலாம் கட்சி பொன்ராஜ்

தன் மீது அரசியல் சாயம் பூசப்படுவதை ஒருபோதும் விரும்பாதவர் அப்துல் கலாம். அரசியலுக்கு அப்பாற்பட்டு நாட்டின் குடிமகனாகப் பார்க்கப்பட்ட அவருடைய பெயரில் அரசியல் கட்சி தொடங்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘அப்துல் கலாம் லட்சிய இந்திய கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கியுள்ளார் கலாமின் ஆலோசகர் வி.பொன்ராஜ். அவரிடம் பேசினோம்.

‘‘கலாம் பெயரில் நீங்கள் கட்சி ஆரம்பித்திருப்பது சர்ச்சையை உருவாக்கி இருக்கிறதே?’’

‘‘கலாம், அரசியல் ஆர்வம்கொண்டவர். அரசியல் ஆர்வத்தையும், அறிவையும் மாணவர்களிடேயே ஏற்படுத்த ஐ.ஏ.ஏ.எம்., ஐ.ஐ.டி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை நானும், கலாமும் நடத்தியுள்ளோம். இந்தக் கட்சியை பொன்ராஜ் என்ற தனிமனிதன் தொடங்கவில்லை. கலாமின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தொடங்கி உள்ளனர். அவர்கள் என்னை வழிகாட்டுமாறு கேட்டுக்கொண்டதற்கு இணங்க இந்தக் கட்சி தொடங்கி உள்ளோம்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்