கார்த்தி சிதம்பரத்தை வளைக்கும் மலேசிய ரகசியங்கள்!

கொந்தளிப்பில் நாடாளுமன்றம்

ஜே.என்.யு விவகாரத்தை விவாதிக்க முடியவில்லை... ஸ்மிருதி இரானியின் அபத்தப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்க முடியவில்லை... பட்ஜெட்டின் நிறைகுறைகள் அலசப்படவில்லை... அனைத்தையும் ஓரம்கட்டிவிட்டு, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைதுசெய்ய வேண்டும் என்ற கோஷங்கள் நாடாளுமன்றச் சுவர்களில் முட்டி மோதி எதிரொலித்துக் கொண்டிருக்கின்றன. காரணம், அ.தி.மு.க எம்.பி-க்கள்.

கூச்சலுக்கான வெளிப்படைக் காரணம்!

2015 டிசம்பர் 2-ம் தேதி, மத்திய அமலாக்கத் துறையும் வருமானவரித் துறையும் இணைந்து, ஒரே சமயத்தில்...  ஒரே நபரைக் குறிவைத்து சென்னை, திருச்சி உட்பட தமிழகத்தில் பல இடங்களில் ரெய்டு நடத்தின. ரெய்டுக்கு உள்ளானவர், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம். அவர் நடத்தும் அலுவலகங்கள், அவர் நிறுவனங்கள் தொடர்புடைய அலுவலகங்கள் மற்றும் அவரது வீடுகள் ரெய்டு செய்யப்பட்டன. ரெய்டுக்குக் காரணம், ஏர்செல் - மேக்ஸிஸ் ஊழல் விவகாரத்தில், தயாநிதி மாறன் மட்டும் குற்றவாளி அல்ல... அதில், கார்த்தி சிதம்பரம், அவருடைய தந்தை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கும் தொடர்பு உண்டு என்ற குற்றச்சாட்டு.

வெளியான சிதம்பர ரகசியங்கள்...

2015 டிசம்பர் 2-ம் தேதி ரெய்டுக்கு, பல மாதங்களுக்கு முன்பே இதுபோல் சில ரெய்டுகளும் சிதம்பரம் குடும்பம் தொடர்பான நிறுவனங்களில் நடத்தப்பட்டன. அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தமிழகத்திலும் இந்தியாவிலும் சிதம்பரம் குடும்பத்துக்கு உள்ள தொழில் முதலீடுகள் வெளியில் தெரிய ஆரம்பித்தன.

ஆனால், அந்த ஆவணங்களைவைத்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டபோது, சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு உலக அளவில் தொழில் தொடர்புகள், அசையும் சொத்துக்கள் - அசையாச் சொத்துக்கள் என பரந்து விரிந்த சாம்ராஜ்யம் இருப்பது தெரியவந்தது. இதுதான் அ.தி.மு.க எம்.பி-க்களின் கூச்சலுக்குக் காரணம். சிதம்பரத்தையும், கார்த்தி சிதம்பரத்தையும் இதற்காக கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒற்றைக் கோரிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்