பெரியோர்களே... தாய்மார்களே! - 69

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

நீலத்திரைக் கடல் ஓரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரி எல்லை - வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு -
என்று பாடினான் மகாகவி பாரதி!

புகழ்மண்டிக் கிடக்கும் தமிழ்நாட்டை புழுதியால் மூடி தட்சிணப் பிரதேசம் ஆக்கும் காரியத்தை பிரதமர் ஜவஹர்லால் நேரு பார்த்தார். ஒரு விபரீத யோசனை நேருவுக்கு எதனால் வந்தது? யாரால் வந்தது என்று இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ‘இந்தியாவை ஐந்து மாகாணங்களாகப் பிரிக்கப் போகிறேன்’ என்று திடீர் பிரகடனம் செய்தார் அவர்.

கிழக்கு மாகாணம், மேற்கு மாகாணம், வடக்கு மாகாணம், தெற்கு மாகாணம், மத்திய மாகாணம் என்று அதற்குப் பெயர்களும் சூட்டினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாகாணங்கள் சேர்ந்து ஒரே மாகாணமாக, ‘தெற்கு மாகாணமாக ஆக்கப்படும்’ என்றார். அவரது மொழியில் சொல்லப்போனால் அதற்கு, ‘தட்சிணப் பிரதேசம்’ என்று பெயர்.

அரை நூற்றாண்டு காலமாக காங்கிரஸ் எடுத்துவந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் விரோதமாக, மொழிவாரி மாகாணப் பிரிவினைக்கு எதிராக நேரு செயல்பட்டார். மொழிவாரி மாகாணம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவில் சொன்னதே காங்கிரஸ் கட்சிதான். 1920-ல் நடந்த நாகபுரி காங்கிரஸில், ‘‘எதிர்கால இந்தியாவை புனரமைப்பதற்கு மொழிவழியே உகந்த வழி’’ எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு எட்டு ஆண்டுகள் கழித்து, நேரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு தனது அறிக்கையில், ‘‘மொழிதான் கலாசாரம், பாரம்பர்யம், இலக்கியம் போன்ற துறைகளில் மக்களிடையே ஓர் இயல்பான உறவை வளர்த்து அந்த வட்டாரங்கள் வளர்ந்து வளர்ச்சி பெற துணை செய்யும்’’ என்பதை ஒப்புக்கொண்டது. நேருவின் அறிக்கை லக்னோ காங்கிரஸில் வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்