“மினிஸ்ட்டரா... மிடாஸ் ஆலைப் பணியாளரா?”

மகளிர் ஆலோசனைக் கூட்டத்தில் கனிமொழி காட்டம்

ட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட சூட்டோடு திருச்சியில் தி.மு.க மகளிர் ஆலோசனைக் கூட்டத்தை, கடந்த 6-ம் தேதி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மிகப் பிரமாண்டமாக நடத்திக்காட்டியுள்ளார் தி.மு.க எம்.பி கனிமொழி.

தமிழகம் முழுவதிலும் இருந்து திரண்டு வந்திருந்த மாநில மகளிர் அணியினர், மகளிர் தொண்டர் அணியினர், பிரசாரக் குழுத்  தொண்டர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். தி.மு.க பொருளாளர் ஸ்டாலின், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய கனிமொழி, “தேர்தலில் வெற்றி பெற்று அண்ணா தலைமையில் ஆட்சியைப் பிடித்து பதவியேற்றுக்கொண்ட நாள்தான் இன்று. எனவே, இந்தக் கூட்டம் தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்கு அச்சாரமாக இருக்கும். நமக்கு நாமே பயணத்தின் மூலம் அண்ணன் ஸ்டாலின், தமிழகம் முழுவதும் வீதிவீதியாகச் சென்று மக்களைச் சந்தித்துள்ளார். பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கியதும், 1989-ம் ஆண்டு மகளிர் சுய உதவிக் குழுக்களை உருவாக்கியதும் தலைவர் கலைஞர்தான். மகளிர் குழுக்களுக்கு 6 ஆயிரத்து 342 கோடி ரூபாய் சுழல் நிதி வழங்கியவர் அண்ணன் ஸ்டாலின். ஆனால், இன்றைய அ.தி.மு.க ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை. பெண் முதல்வராக ஆளும் தமிழகத்தில் கடந்த நான்கரை ஆண்டுகளில் பெண்களுக்கு எதிராக 21 ஆயிரத்து 427 வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த ஆட்சியில் பல தொழிற்சாலைகள் மூடப் பட்டதால், பெண்கள் வேலை இழந்துள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும்போது அதில் ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் கவனம் செலுத்தினர். இதைவிடக் கொடுமை என்னவென்றால், சிறுமியைக் கட்டாயப்படுத்தி கதற, கதற கையில் பச்சை குத்தியதை அமைச்சர்கள் சிரித்துக்கொண்டே வேடிக்கை பார்த்தனர். இந்த மாதிரி கேவலம் ஹிட்லர் ஆட்சியில்கூட நடந்தது இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்