காற்றும் கரியும் ஒன்று சேர்ந்திருக்கின்றன!

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியைப் போட்டுத்தாக்கும் ஆனந்தராஜ்

‘நடிகர் ஆனந்தராஜ் இறந்துவிட்டார்’ என்று கடந்த 4-ம் தேதி திடீரென வாட்ஸ்அப், ஃபேஸ்புக் என சமூக வலைதளங்களில் செய்தி பரபரத்தது. என்ன நடந்தது என்று அறிய அவரது வீட்டுக்குச் சென்றபோது, ஜம்மென்று மேக்கப்பில் பளபளத்தார் ஆனந்தராஜ்.

‘‘ஏன் இந்தப் புரளி’’ என்று கேட்டதற்கு, “எனக்கு வேண்டாத சிலர் சமூக வலைதளங்​களில் இதுபோன்று புரளியைக் கிளப்பி இருக்கின்றனர். இதையெல்லாம் பொருட்​படுத்தாமல் அ.தி.மு.க-வுக்கு ஆதரவாகத் தேர்தல் பிரசாரத்துக்குக் கிளம்பிவிட்டேன்” என்றவரிடம் சில அரசியல் கேள்விகளை முன்வைத்தோம்.

“சட்டமன்றத் தேர்தல் களத்தில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்​கிறதே?”   
        
 “மக்களை நம்பி, அ.தி.மு.க-தான் துணிந்து, தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. 2006-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலிலேயே தி.மு.க-வின் முடிவு எழுதப்பட்ட ஒன்று. அப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் என்று சக்திவாய்ந்த கூட்டணி அமைத்து இருந்தபோதும் தி.மு.க மட்டும் 96 தொகுதிகளில் வென்றது. அம்மா 61 தொகுதிகளில் வென்றார். எனவே, அப்போது, தி.மு.க மைனாரிட்டி அரசாகத்தான் இருந்தது. அப்போதே, ஒருமுறை தி.மு.க ஆட்சி செய்தால், மறுமுறை அ.தி.மு.க ஆட்சி என்கிற முறை முடிவுக்கு வந்துவிட்டது.  காங்கிரஸோடு, தி.மு.க என்றைக்கு கைகோத்்ததோ அப்போதே காற்றும், கரியும் ஒன்றாகிவிட்டன. ஆமாம், அலைக்கற்றை எனும் காற்றில் ஊழல்செய்த தி.மு.க-வும், நிலக்கரியில் ஊழல் செய்த காங்கிரஸும் ஒன்று சேர்ந்திருக்கின்றன. பி.ஜே.பி-யை இழுத்து காங்கிரஸை காட்டிக்கொடுக்கும் சக்தியாக கருணாநிதியை வளைக்க சுப்பிரமணியன் சுவாமி திட்டம் போட்டார். அதனால், அது பலிக்கவில்லை.”   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்