“இலவசக் கல்வியும் மருத்துவமும்தான் நமது லட்சியம்... இலவசப் பொருட்கள் அல்ல!”

சகாயம் விளாசல்கண்ணியமான தேர்தல்

தேர்தல் விழிப்பு உணர்வுக் கூட்டம் மதுரை காந்தி மியூஸியத்தில் நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம், தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டிய கண்ணியம் குறித்து நெத்தியடியாகப் பேசினார்.

முதலில் பேசிய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரியான தேவசகாயம், ‘‘நம்மால் தேர்வு செய்யப்பட்ட ஒருவர், யார் காலிலும் விழக் கூடாது. காலில் விழுவது மிகப் பெரிய அவமானம். மானம், மரியாதை, கண்ணியம் மூன்றையும் இழந்துவிடக் கூடாது. மரியாதையைப் பற்றி ஆழமாகச் சொன்னவர் தந்தை பெரியார், கண்ணியத்துக்காகப் பாடுபட்டவர் அண்ணா. பெரிய தலைவர்கள் வாழ்ந்த பூமி இது. ஆகவே, பணத்துக்காக நம் ஓட்டை விற்கக் கூடாது’’ என்றார்.

நிறைவு உரையாக சகாயம் பேசுகையில், ‘‘இப்போது எல்லாம் என்னைச் சந்திக்கும் பலரும், ‘சுடுகாட்டில் கட்டில் போட்டு படுத்து இருந்தீர்களே... உங்களுக்குப் பேய், ஆவிகள் என்றால் பயம் இல்லையா?’ என்று கேட்கிறார்கள். அவர்களுக்கு நான் அளிக்கும் பதில்... ‘பல ஆண்டுகளாகப் பல இடங்களில் பணியாற்றி வருகிறேன். அங்கு பல ஊழல் பேய்களையும் லஞ்ச ஆவிகளையும் சந்தித்துள்ளேன். அந்தக் கொடூரப் பேய்களைச் சந்தித்த எனக்கு, அந்தச் சுடுகாட்டில் இருக்கும் பேய்கள் பற்றி அச்சம் வரவில்லை’ என்பதுதான்.

வரப்போகும் சட்டமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்கவேண்டும். கண்ணியமான தேர்தல் நடக்கவேண்டும். அப்போதுதான் ஊழல்வாதிகளின் கூட்டமைப்பை ஒழிக்க, நீதியின் கரம் வலுப்பெறும். தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கும் மருத்துவ வசதியைப்போல், அரசு மருத்துவமனைகளில் எப்போது சிகிச்சைகள் மற்றும் வசதிகள் ஏழை மக்களுக்குக் கிடைக்கிறதோ அப்போதுதான் நமக்கு முழு சுதந்திரம் கிடைத்ததாக உணரவேண்டும். தமிழகத்தில் கல்வித் துறையும் தனியாருக்கு ஈடாக முன்னேற வேண்டும். ஆண்டிப்பட்டியில் இருக்கும் கிராமத்து மாணவர்களுக்கும் முழுமையான கல்வி வந்தடைய வேண்டும். அதுதான் ஒரு நல்ல அரசியல்வாதியின் முழுமையான ஆட்சி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்