ஒரு நடிகை ஆடிய கல்யாண நாடகம்...

வீடு... அப்பா... அம்மா... தம்பி... எல்லாமே செட்டப்!

பல ஆண்களைக் காதல் வலையில் விழவைத்து, அவர்களிடம் லட்சக் கணக்கில் பணம் சுருட்டிய அனிதாவின் கதை, ஏற்கெனவே ஜூ.வி-யில் வெளியானது. இப்போது, ஸ்ருதி பட்டேல் என்ற திரைப்பட நடிகை, அதைவிட பல மடங்கு மோசடி செய்து இளைஞர்களை ஏமாற்றியிருப்பதாகப் புகார் எழுந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட சாஃப்ட்வேர் என்ஜினீயர் சந்தோஷ்குமாரிடம் நடந்தது என்ன என்று கேட்டோம். “நான், ஒரு மேட்ரிமோனியல் வெப்சைட்டில் வரனுக்காகப் பதிவுசெய்திருந்தேன். அதைப் பார்த்துட்டு ஸ்ருதி என்ற பெண்ணின் வீட்டார் எங்களைத் தொடர்பு கொண்டனர்.   ‘எல்லாப் பொருத்தங்களும் சரியா இருந்துச்சு. ‘பொண்ணு என்ஜினீயரிங் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்குறா. 4 மாசம் கழித்து கல்யாணம் வெச்சுக்கலாம்’னு அவங்க பெற்றோர் சொன்னாங்க. இந்த நேரத்துல என்னோடும், குடும்பத்தோடும் ஸ்ருதி நெருங்கிப் பழகினாங்க. நகை உட்பட நிறையப் பொருட்களை ஸ்ருதிக்குப் பரிசளித்தேன். ஒரு நாள், ஸ்ருதி ஆக்ஸிடென்ட் ஆகி கோயம்புத்தூர் ஆஸ்பிட்டல் ஒன்றில் அட்மிட் ஆகியிருப்பதாகச் சொன்னாங்க. ஆனா, அங்கே எங்களைப் பார்க்க அனுமதிக்கலை. நானும், என் அம்மாவும் அவங்க வீட்டுக்குப் போனோம். வீட்டையே ஆஸ்பிட்டல் மாதிரி செட்டப் பண்ணியிருந்தாங்க. ‘ஸ்ருதியோட அப்பா துபாய்ல இருக்கார். ட்ரீட்மென்ட்க்குப் பணம் வேணும்’னு கேட்டாங்க. அவசரம்கறதால பணம் கொடுத்தேன். கொஞ்சநாள்ல திரும்பவும், ஸ்ருதி வீட்டுல தவறி விழுந்துட்டதாகவும் தலையில் ப்ளட் க்ளாட் ஆகியிருக்கிறதாகவும் சொன்னாங்க. திரும்பவும் எங்கிட்ட பணம் கேட்டாங்க. ‘சொத்து பூரா அவர் பெயரில் இருக்கு. அவர் துபாய்ல இருக்கறதால எதையும் விக்க முடியலை. அவர் வந்த உடனே உங்க பேர்ல இந்தச் சொத்தை எழுதி வைச்சிடுறோம்’னு சொன்னாங்க. சொத்தை எழுதி வைக்கற மாதிரி நடிச்சாங்க. இதை நம்பி, எங்கிட்ட இருந்த 150 சவரன் தங்கக் காசுகளை வித்து ட்ரீட்மென்ட்க்குப் பணம் கொடுத்தேன். என் வங்கியில இருந்து அவர்கள் கணக்குக்கு ரூ.35 லட்சம் பணம் அனுப்பினேன். மொத்தம் 80 லட்ச ரூபாய் செலவு பண்ணியிருக்கேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்