1.65 கோடி மோசடியா? - தொடங்கியது நடிகர் சங்க யுத்தம்

சிக்கலில் சரத்குமார்!

நான்கு மாதங்களாக ஓய்ந்திருந்த நடிகர் சங்க விவகாரம் மீண்டும் வெடிக்கத் தொடங்கிவிட்டது. கூட்டணிக் கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்த சரத்குமாரை, நடிகர் சங்க அறக்கட்டளையின் கணக்கு விவகாரம் சிக்கலில் சிக்கவைத்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமார் அணி தோல்வியைத் தழுவிய பிறகு, புதிதாகப் பொறுப்பேற்ற நாசர் தலைமையிலான அணியினர், நடிகர் சங்கத்தின் கடந்தகாலக் கணக்கு வழக்குகள் குறித்து சரத்குமார் தரப்பிடம் விளக்கம் கேட்டனர். நடிகர் சங்க அறக்கட்டளையின் கணக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில், கடந்த 3-ம் தேதி நடிகர் சங்க அறக்கட்டளையில் உறுப்பினராக இருக்கும் பூச்சி முருகன் சென்னை மாநகர போலீஸ் கமிஷனரிடம், “நடிகர் சங்கத் தலைவராக இருந்த சரத்குமார், சங்க அறக்​கட்டளைக்குச் சொந்தமான பணம் ரூ.1.65 கோடியை மோசடி செய்துள்ளார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று புகார் அளித்தார்.

பூச்சிமுருகன் புகார் அளித்ததற்குப் பின் சரத்குமார், “நான் அனைத்து ஆவணங்களையும் ஒப்படைத்து​விட்டேன். எனது பெயரைக் கெடுக்க வேண்டும் என்றே இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என்மீது புகார் அளித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதே கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்