கழுகார் பதில்கள்

 எஸ்.பி.விவேக், தாதம்பட்டி.

அன்புமணி ராமதாஸ் நடிக்க ஆரம்பித்துவிட்டாரே?

 நல்லாவே!

ஜி.எஸ்.மோகன்ராஜ், நன்மங்கலம்.

 ‘‘ஆர்.கே.நகரில் உள்ள ஒரு வாக்கு மையத்தில் வாக்காளர் எண்ணிக்கையைவிட பதிவான வாக்குகள் அதிகம்” என்று தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்லி இருக்கிறார். ‘ஜெயலலிதா வெற்றி பெற்றது செல்லாது’ என்று இவர்கள் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை?


 வழக்குத் தொடுப்பதால் என்ன பயன் என்று நினைத்திருக்கலாம். இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வருவதற்கு முன், ஜெயலலிதாவின் பதவிக்காலமே முடிந்திருக்கும். இந்த நடைமுறைச் சிக்கல் தி.மு.க-வைத் தடுத்திருக்கும். தேர்தல் சம்பந்தமான வழக்குகளை விரைந்து விசாரிக்க வசதியாகத் தனி நீதிமன்றங்கள் அமைக்கலாம்.

என்.முருகேஷ், மங்கைநல்லூர்.

 ஊழலை ஒழிக்க இயக்கம் நடத்துவது என்பது ஒரு நல்ல வழிகாட்டுதல் நெறி. ஆனால், தமிழக அரசியலில் இதற்கான இயக்கங்கள் வெற்றி பெறவில்லையே, ஏன்?


 ஊழலை ஒழிக்க முடியும் என்ற நம்பிக்கை மக்களுக்கே இல்லாமல், இருப்பதுதான் காரணம். ஊழலை இந்த அமைப்பினரால் எல்லாம் ஒழிக்க முடியாது என்ற அவநம்பிக்கை இருப்பதும் இதற்கு மற்றொரு காரணம். ஊழலை தனிமனிதன், தனிப்பட்ட இயக்கம், தனி ஒரு கட்சியால் ஒழிக்க முடியாது. ஊழல் அங்கிங்கெனாதபடி எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. அதை எல்லா இடங்களிலும் எல்லோரும் சேர்ந்துதான் ஒழிக்க முடியும். மாநகராட்சியால் மட்டுமே கொசுவை ஒழிக்க முடியாது. வீட்டுக்கு வீடு கொசு பேட், கொசுவலை வாங்குகிறோம் அல்லவா? அப்படி எல்லாக் கைகளும் சேரும்போதுதான் ஊழலையும் ஒழிக்க முடியும். யாரோ ஒரு சிலர் நன்னெறி பேசுவதால் நன்னெறி தழைத்துவிடாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்