மிஸ்டர் கழுகு: நேர்காணலில் நடந்த அதிகார யுத்தம்!

அ.தி.மு.க-வில் நெக்ஸ்ட்...

‘‘என்ன நடக்கிறது அ.தி.மு.க-வில்?” என்ற கேள்வியை நம்மைப் பார்த்து கழுகார் கேட்டார். ‘‘அதைச் சொல்வதற்காகத்தானே உமக்காகக் காத்திருந்தோம்” என்றோம்.

சிரித்தபடியே ஆரம்பித்த கழுகார், ‘‘அ.தி.மு.க-வில் அடுத்த அதிகார மையம் யார்? என்ற போட்டி வந்து​விட்டது” என்றார்.

‘‘அடுத்த அதிகார மையம் என்றாலே சசிகலாதானே? இதில் என்ன சந்தேகம்?”

‘‘நீர் சொல்கிறீர். ஆனால் அவர்களுக்குப் பல சந்தேகங்கள் வந்துவிட்டன. ஐவர் அணியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், பழனியப்பன், எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அ.தி.மு.க-வின் அடுத்த வி.வி.ஐ.பி-களாக வளர்ந்துவிடக் கூடாது என்று மன்னார்குடி குடும்பத்தினர் நினைக்கிறார்கள். எனவே, அவர்களைத் தட்டிவைக்கும் காரியங்கள் எல்லா வகையிலும் நடக்க ஆரம்பித்துள்ளன. பன்னீர், நத்தம் ஆகியோரின் நிழல்கள் சிலரிடம் இருந்து பதவிகளைப் பறித்ததும் இதன் பின்னணியில்தான். சிலரது வீடுகளில் ரெய்டுகள் நடந்ததாகவும் சொல்லப்படுகிறது. இவர்கள் மனசு வைத்தால் நமக்கு சீட் கிடைக்கும் என்ற நப்பாசையில் பலரும் அவர்களைச் சந்தித்து வந்தார்கள். அதையும் மன்னார்குடி குடும்பத்தினர் விரும்பவில்லை.”

‘‘என்ன காரணம்?”

‘‘நாளைக்குக் கட்சிக்குள் ஏதாவது பிரச்னை வந்தால், இவர்களுக்குப் பின்னால் யாரும் போய்விடக் கூடாது அல்லவா? ஒரு காலத்தில் பண்ருட்டி, திருநாவுக்கரசு, முத்துச்சாமி, கண்ணப்பன் என்று உருவானார்கள் அல்லவா? நாங்கள்தான் உண்மையான அ.தி.மு.க என்று சொன்னார்கள் அல்லவா? அந்த மாதிரியான சூழ்நிலை வந்துவிடக் கூடாது என்பதால், இப்பவே உஷாராக இருக்கிறார்களாம். முடிந்த அளவு இந்த ஐந்து பேரையும் ஒதுக்கி வைத்துக் காரியங்கள் பார்க்கச் சொல்லி இருக்கிறார்கள். தொண்டர்களுக்கு இந்தத் தகவல்கள் தெரிய வேண்டும் என்றும் அவர்கள், இவர்கள் ஐவரையும் ஒதுக்க வேண்டும் என்றும் மன்னார்குடி குடும்பத்தினர் நினைக்கிறார்கள்.”

‘‘ஓஹோ!”

‘‘அ.தி.மு.க சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 26 ஆயிரத்து 174 பேர் மனுக் கொடுத்து இருந்தார்கள். அதில் 7 ஆயிரத்து 936 பேர் ஜெயலலிதாவுக்காக மனுச் செய்திருந்தனர். இவர்களில் ஐந்து பேரை மட்டும் போயஸ் கார்டனுக்கு கடந்த 6-ம் தேதி திடீரென்று அழைத்து நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. இதுபோன்ற நேரங்களில்  ஐவர் குழுவினர் உடன் இருப்பார்கள். ஆனால், இந்தத் தடவை அவர்களுக்கு அழைப்பே இல்லை. இப்படி நேர்காணல் நடப்பதுகூட அவர்களுக்குத் தெரியாது என்கிறார்கள். கட்சியின் அதிகாரபூர்வ தொலைக்காட்சியில் இந்தத் தகவல் வெளியான பிறகுதான் நேர்காணல் தகவல் ஐவர் அணியினருக்குத் தெரிய வந்ததாம்!”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்