பெரியோர்களே... தாய்மார்களே! - 70

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்ஓவியம்: டிராட்ஸ்கி மருது

‘‘தீ என்னைத் தீண்டாது. தீயோரின் பிடியிலிருந்து நான் விடுதலை பெற்றுவிட்டேன். தீரமற்றோரே... தெளிவற்றோரே! இனி தீ உங்களைத்தான் தாக்கும்! வெந்து வேதனைப்படுங்கள்! உணர்ச்சியற்ற உருவங்களே! உண்ண, உடுக்க, இருக்க வழி கிடைத்தால்போதும் என்று எண்ணி அவற்றைப்பெற, விடாப்பிடியாகவும் இழிநிலையைச் சகித்துக்கொள்ளவும் சம்மதித்துக் கிடக்கும் சத்தற்ற ஜென்மங்களாகிவிட்ட சடங்களே! கருகிப் பொடியாகட்டும். எனக்கென்ன! இதோ நான் கண்மூடி விட்டேன்! இனி உங்களைத் திரும்பிப் பாரேன்! செல்கிறேன். சிந்திக்கவும் செயலாற்றவும் திறனற்றுப்போன உமைக்காணக் கூசினேன். இந்த நிலை பெற்றீரே என்றெண்ணிக் குமுறினேன். இனி இவர்தம் கூட்டுறவு வேண்டாம் என்று துணிந்தேன். சாவை வரவேற்கிறேன்! நான் மறைகிறேன்!”

- இந்தக் கண்ணீர் வரிகள் பேரறிஞர் அண்ணா வடித்தவை!

தமிழர் வாழும் நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டச்சொல்லி கோரிக்கை வைத்து அதற்காக 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்துபோன விருதுநகர் சங்கரலிங்கனார் இப்படிச் சொல்வதாக அண்ணா எழுதினார்.

அண்ணா மென்மையான இதயம் படைத்தவர். அதனால், அவரினும் மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். உண்ணாவிரதம் இருந்த நாட்களில் மூன்று கடிதங்களை சங்கரலிங்கனார் எழுதினார். தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஏன் தலை கவிழ்ந்தது, அதன் பிறகு ஏன் தலையெடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள இந்தக் கடிதங்கள்போதும். காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தாலும் ஓர் இனத்துக்கு மொழி எத்தகைய அடித்தளமாக இருக்கிறது, இருக்கும் என்பதை உணர்ந்தவராக சங்கரலிங்கனார் இருந்தார். இதை உணரத் தவறியவர்களாக அன்றைய காங்கிரஸ் தலைவர்கள் இருந்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்