அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

டைபெற இருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று தங்களுக்குத் தெரிந்த ‘ரூட்’களில் எல்லாம் அ.தி.மு.க-வினர் கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இதுபற்றிய, சில மாவட்டங்களின் நிலவரங்களைக் கடந்த இதழில் வெளியிட்டோம். இந்த இதழிலும் அது தொடர்கிறது...

விருதுநகர் மாவட்டம்

சிவகாசி: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் தொகுதி இது. இவர், அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளரும்கூட. மீண்டும் இங்கே போட்டியிட விரும்புகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகள் 200 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வாங்கிக் கொடுத்து, தேர்தல் வேலைகளை ஜரூராகத் தொடங்கிவிட்டார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தக்காரும், பேப்பர் மில் அதிபருமான ஸ்ரீபதி ரவிச்சந்திரனுக்கு சசிகலாவின் அறிமுகம் உண்டு. இவரும் சிவகாசி தொகுதியைக் கேட்டு வருகிறார் என்கிறார்கள்.

சாத்தூர்: அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரின் தொகுதி. மீண்டும் இங்கு போட்டியிட விரும்புகிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஆன்ட்ராய்டு போன்கள் வாங்கிக் கொடுத்து தேர்தல் வேலைகளைத் தொடங்கிவிட்டார். சாத்தூர் ஒன்றியச் செயலாளர் சண்முகக்கனி, மாவட்ட கவுன்சிலர் கே.வி.கே.ராஜு ஆகியோரின் பெயர்களும் அடிபடுகின்றன.

அருப்புக்கோட்டை: முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனின் தொகுதி. மீண்டும் இங்கு போட்டியிட விரும்பும் வைகைச்செல்வன், கடும் முயற்சிகள் எடுத்து வருகிறார். அருப்புக்கோட்டை யூனியன் சேர்மன் யோகா வாசுதேவன், அ.தி.மு.க-வின் மாவட்ட அவைத் தலைவர் ஆமத்தூர் வக்கீல் விஜயக்குமார் ஆகியோரது பெயர்களும் அடிபடுகின்றன. வைகைச்செல்வனுக்கு மீண்டும் சீட் கிடைக்கலாம்.

விருதுநகர்: தே.மு.தி.க அதிருப்தி எம்.எல்.ஏ-வாக இருந்து அண்மையில் அ.திமு.க -வில் இணைந்த மாஃபா பாண்டியராஜனுக்கு இந்த முறை சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் ஆதரவாளரான விருதுநகர் யூனியன் சேர்மன் கலாநிதியும் சீட் வாங்க முயற்சித்து வருகிறார்.

திருச்சுழி:
அ.தி.மு.க-வின் காரியாப்பட்டி ஒன்றியச் செயலாளர் கரியனேந்தல் ராமமூர்த்திராஜ், நரிக்குடி முன்னாள் யூனியன் சேர்மன் ஜெயராஜ் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. ஆனாலும், சசிகலாவின் தீவிர ஆதரவாளரான மலைராஜனுக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி): அ.தி.மு.க-வின் மாவட்ட கவுன்சிலர்கள் முத்தையா, பட்டி சீனிவாசன் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்கலாம் என்கிறார்கள்.

ராஜபாளையம்: தற்போதைய எம்.எல்.ஏ-வான கோபால்சாமி, இந்தத் தொகுதியை மீண்டும் பெறுவதற்குக் கடுமையாக முயற்சி செய்கிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராஜபாளையம் நகராட்சித் தலைவர் மறைந்த சுப்பாராஜாவின் மகனும் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச்செயலாளருமான ஷியாம் ராஜா, ராஜபாளையம் யூனியன் துணைத்தலைவர் எஸ்.ஏ.மணிகண்டன் ராஜா, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியின் தீவிர ஆதரவாளரான ராஜவர்மன் ஆகியோரின் பெயர்களும் பலமாக அடிபடுகின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்