திடீர் சாலைகள்... நள்ளிரவு வேலைகள்!

தொடரும் தேர்தல் விதிமீறல்கள்

மிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக, கடந்த 4-ம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்றுமுதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன. சில இடங்களில் விதியை மீறி சாலைப் பணிகள் நடக்கின்றன. எந்த அடிப்படையில் இவை நடக்கின்றன என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கேட்கின்றனர்.

சென்னையில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் பெசன்ட் சாலை, திருநாவுக்கரசு தோட்டம், பகிர் சாகிப் தெரு, ராமசாமி கார்டன், ஹக்கீம் ஹக்கம் தெரு, தங்கவேலு வைத்தி தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இரவோடு இரவாகச் சாலைகள் போடப்பட்டன. இதுதொடர்பாகத்  தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனிடம் கேட்டோம். ‘‘சாலைகள்  அமைக்கப்படுவது  எனக்கே தெரியாது. தொகுதி மக்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். மாநகராட்சி ஆணையரைக் கேட்டபோது என் தொகுதி நிதியில்தான் இந்தச் சாலைகள்  போடப்படுவதாகக் கூறினார். ஒரு வருடத்துக்கு முன்பு ஒதுக்கப்பட்ட என் தொகுதி நிதியான ரூ.3 கோடியில் தற்போது சாலைகள் அமைக்கப்படுவது வேடிக்கையாக உள்ளது.

செய்ய வேண்டிய நேரத்தில் இந்தப் பணிகளைச்  செய்யாமல்,  தற்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? சென்னை மாநகராட்சி ‘அ.தி.மு.க-வின் மனசாட்சி’யாகச் செயல்படுகிறது.  இந்தத் தேர்தல் விதிமீறல் தொடர்பாக  ஆவணங்களைச் சேகரித்து வருகிறேன்.   விரைவில் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளேன்” என்றார்.    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்