கழுகார் பதில்கள்!

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

 மக்கள் நலக் கூட்டணியில் இணைய தே.மு.தி.க., த.மா.கா ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து நம்பிக்கையோடு வைகோ காத்திருப்பது பற்றி..?


 விஜயகாந்த் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்ததும் அவரைச் சென்று சந்தித்ததும் ஒரு கூட்டணிக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் வைகோ செய்யலாம். தவறு இல்லை. ஆனால், விஜயகாந்த் என்ன நிலைப்பாட்டை அறிவிக்கப் போகிறார் என்று தெரியாத நிலையில் மாநாட்டுக்கு மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வாழ்த்து அனுப்புவதும், ‘விஜயகாந்த் தி.மு.க-வுடன் சேரமாட்டார்... சேரமாட்டார்’ என்று அந்தக் கட்சியின் அனுதாபிகள் சொல்வதைப்போல வைகோ சொல்லிக்கொண்டு இருப்பதும் அந்தக் கூட்டணிக்கே நல்லது அல்ல. எத்தனையோ விமர்சனங்கள் இருந்தாலும் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய அமைப்புகளுக்கு இதுதான் கொள்கை என்று சொல்லிக்கொள்ள கொள்கை இருக்கிறது. இவர்கள் தங்கள் கூட்டணிக்கு, விஜயகாந்த்தை வரவழைக்க இந்த தாங்கு தாங்குவது... இந்தக் கூட்டணி எத்தகைய ஆட்களை ஈர்க்கும் என்று நினைக்கிறார்களோ, அந்த ஆட்களுக்கே எரிச்சலை ஏற்படுத்தும்.

திருப்பூர் அர்ஜுனன்.ஜி., அவிநாசி-54.

 ‘கண்ணுக்கு எட்டிய வரை எதிரிகளே இல்லை’ என்று ஒரு காலத்தில் சொன்னார் ஜெயலலிதா. இப்போது சட்டமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைவரே இல்லை என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே?


 உருவாகிவிட்டதா... உருவாக்கிவிட்டாரா? சட்டமன்றம் நடக்கும்போது இருக்கும் பொறுப்புதான் எதிர்க் கட்சித் தலைவர் என்பது. சட்டசபை கூட்டம் நடக்காதபோது ஆக்டிவ்வாக இருப்பது இல்லை. விஜயகாந்த்தை பொறுத்தவரை சட்டசபை நடக்கும்போதே ஆக்டிவ்வாக இருப்பது அல்ல. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால், மக்களைப் பற்றி கவலைப்படுபவர்கள்... மக்கள் பிரச்னைக்காகப் பேசுபவர்கள் அனைவருமே எதிர்க் கட்சித் தலைவர்கள்தான். அந்த எதிர்க் கட்சித் தலைவருக்கு அழிவே இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்