“வண்டியில 2 கோடி...” - தி.மு.க... நேர்காணல் சுவாரஸ்யங்கள்!

அ.தி.மு.க-வில் விருப்பமனு அளித்த 26 ஆயிரம் பேரில் ஐந்து பேரிடம் மட்டும் நேர்காணல் நடத்தினார் ஜெயலலிதா. ஆனால், தி.மு.க-வில் விருப்பமனு அளித்த அனைவரிடமும், தானே முன்னின்று நேர்காணல் நடத்தி முடித்துள்ளார் தலைவர் கலைஞர். அவரை நேராகச் சந்திக்க வாய்ப்புக் கிடைத்ததே மகிழ்ச்சிதான்” என்கிறார் நேர்காணலில் கலந்துகொண்ட தி.மு.க நிர்வாகி ஒருவர்.

மாவட்டவாரியாக அழைக்கப்பட்ட தேதியில் நேர்காணலுக்கு வந்திருந்தவர்கள், அறிவாலய வளாகத்தில் இருந்த பந்தலில் தொகுதிவாரியாக அமர வைக்கப்பட்டனர். கருணாநிதியின் அறையில் நேர்காணல் நடைபெற்றது. கருணாநிதி மையமாக அமர்ந்திருக்க, அவருக்கு இடதுபுறத்தில் ஸ்டாலினும், வலதுபுறத்தில் பேராசிரியர் அன்பழகனும், அவருக்கு அடுத்ததாக துரைமுருகனும், ஆர்.எஸ்.பாரதியும் அமர்ந்திருந்தனர். வெளியே பந்தலில் இருந்தவர்களில் ஆறு பேர் வீதம் உள்ளே அழைக்கப்பட்டனர். அவர்கள் கருணாநிதியின் அறைக்கு முன் இருந்த ஓர் அறையில் காத்திருக்க வைக்கப்பட்டு, ஒவ்வொரு நபராக வரிசைப்படி உள்ளே அனுப்பப்பட்டனர். இவர்களை பூச்சி முருகன், கு.க.செல்வம், உசேன் உள்ளிட்டோர் வரிசைப்படுத்தி உள்ளே அனுப்பிவைத்தனர். விண்ணப்பம் செய்திருந்தவரின் விருப்பமனுவினை ஸ்டாலின் வைத்திருந்தார். வந்தவர் இருக்கையில் அமர்ந்தவுடன், கருணாநிதியிடம் இருந்தே கேள்விகள் தொடங்கின. அவர் கேட்ட முதல் கேள்வி, “எந்தச் சமூகம் நீ?”, அடுத்ததாக, “எவ்வளவு செலவு செய்ய முடியும்?” என இரண்டு கேள்விகள் மட்டும் கேட்டார். கொஞ்சம் புதுமுகமாக இருப்பவர்களிடம், “கட்சிக்கு வந்து எத்தனை வருடங்கள் ஆகின்றன, என்ன பொறுப்பில் உள்ளீர்கள்?” என்ற கேள்விகளை எழுப்பினார். பலர் கருணாநிதியை சந்திக்க வேண்டும் என்ற ஆசையில் விருப்பமனு அளித்து இருந்தனர். அவர்கள், “எனக்கு சீட் தரவில்லை என்றாலும் பரவாயில்லை. எங்கள் மாவட்டச் செயலாளருக்குக் கொடுக்க வேண்டாம்” என்ற புகாரைப் பதிவுசெய்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்