பெரியோர்களே... தாய்மார்களே! - 71

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

காங்கிரஸ் கட்சியின் எல்லாத் தவறுகளுக்கும் ஒரு மனிதனைக் காரணமாகக் காட்டினார்கள் என்றால், அது பக்தவத்சலம்தான். இதை அந்தக் கட்சியின் எதிரிகள் மட்டுமல்ல, சொந்தக் கட்சிக்காரர்களே சொன்னதுதான் பக்தவத்சலம் சந்தித்த சோகம். அன்றைய காமராஜரே அப்படிச் சொல்லி இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும் அப்படிச் சொன்னார். மொத்தப் பாவங்களையும் தூக்கிப்போடும் அளவுக்கு உள்ள மனிதர் அல்ல பக்தவத்சலம்.

‘‘எந்தவிதமான எதிர்ப்பு வந்தாலும் மனந்தளராது துடிதுடிப்புடன் ஆக்க வேலைகளில் ஈடுபடும் மனப்பக்குவம் வாய்ந்தவர்” என்று பெருந்தலைவர் காமராஜரால் பாராட்டப் பெற்றவர் பக்தவத்சலம். ஸ்ரீஅஹோபில மடம் 44-வது பட்டம் ஸ்ரீஅழகிய சிங்கர் ஜீயர் சுவாமிகள் சொன்னார்: ‘‘பதவி உயர உயர பேச்சில் நிதானம் வேண்டும். அவர்கள் மனதில் உள்ளதைப் பிறர் அறிய முடியாமல் இருக்க வேண்டும். இதை காம்பீர்யம் என்பார்கள். ஸ்ரீமான் பக்தவத்சலம் அவர்களிடம் இதை நாம் காண முடிகிறது” என்றார்.

பக்தவத்சலத்தின் 71-வது பிறந்த நாள் விழா திருவல்லிக்கேணி ஜனநாயக சேவா சங்கம் சார்பில் நடந்தபோது அதில் அன்றைய முதலமைச்சர் அண்ணா கலந்து கொண்டார். ‘‘பக்தவத்சலம் அவர்கள் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வேண்டும். அவரது அனுபவங்கள் தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாகத் திகழ்பவை” என்றார் அண்ணா. கலைஞர் கருணாநிதி, பல நிர்வாக நுணுக்கங்களை, சட்டசபை வாதத் திறமைகளை பக்தவத்சலத்திடம் இருந்துதான் கற்றுக்கொண்டார். ‘‘துரோணரிடம் ஏகலைவன் தூரத்தில் இருந்து வித்தை கற்றுக்கொண்டதைப்போல நான் கற்றுக்கொண்டேன். ஒரே ஒரு வித்தியாசம் இவர் கட்டை விரலைக் காணிக்கை கேட்காத துரோணாச்சாரியார்” என்று கருணாநிதியே மனப்பூர்வமாகச் சொல்லி இருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்