அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

மிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பும் அ.தி.மு.க-வினர், சீட் வாங்குவதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். யார் யார் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள்? யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது பற்றிய நிலவரங்களைக் கடந்த இரண்டு இதழ்களில் வெளியிட்டோம். இந்த இதழிலும் அது தொடர்கிறது...

ராமநாதபுரம் மாவட்டம்

பரமக்குடி (தனி): சமீபத்தில் சர்ச்சையில் சிக்கிய அமைச்சர் சுந்தரராஜின் தொகுதி. இதுவரை இவருக்கு 5 முறை வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த முறை மாற்றம் உண்டு என்றும், மாவட்ட மருத்துவர் அணிச் செயலாளர் டாக்டர் முத்தையா, முன்னாள் எம்.எல்.ஏ-வான பாலுச்சாமி ஆகியோருக்கு சீட் கிடைப்பதில் சம வாய்ப்பு உள்ளது என்றும் சொல்கிறார்கள். முன்னாள் எம்.பி-யான நிறைகுளத்தானின் மகனும் மாநில இளைஞர் அணி துணைச் செயலாளருமான சதன் பிரபாகரன், முன்னாள் எம்.எல்.ஏ-வான உக்கிரபாண்டியனின் உறவினர் ராமச்சந்திரன் ஆகியோரும் வாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர்.

திருவாடானை: முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜனின் மகனும் ஆர்.எஸ்.மங்களம் ஒன்றியச் செயலாளர் மற்றும் ஒன்றிய சேர்மன் பதவி வகிப்பவருமான வ.து.ந.ஆனந்த், திருவாடானை ஒன்றியச் செயலாளர் மதிவாணன் இடையே சீட் பெறுவதில் கடும் போட்டி. மாவட்ட கவுன்சிலர் ஆனிமுத்து, அவரது உறவினரும் திருவாடானை ஒன்றியச் சேர்மனுமான முனியம்மாள், துணை சேர்மன் அரசூர் ராமகிருஷ்ணன் ஆகியோரும் களத்தில் உள்ளனர். ஆனந்துக்கே அதிக வாய்ப்பு என்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்