“வாக்குச்சாவடிக்குச் செல்லுங்கள்... நாட்டைக் காப்பாற்றுங்கள்!”

‘நம் விரல் நம் குரல்’ கருத்தரங்கம்

ந்திய தேர்தல் ஆணையம், ஜூனியர் விகடன், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் சார்பாக ‘நம் விரல்... நம் குரல்!’ என்ற தமிழக சட்டமன்றத் தேர்தல் 2016 விழிப்பு உணர்வு கருத்தரங்கம் தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் மற்றும் பிரிஸ்ட் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் ஸ்ரீதரன், பேராசிரியர் சி.வி.சுப்பிரமணியன், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.நாகராஜன் ஆகியோர் பங்கேற்றனர். பிரிஸ்ட் பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.எத்திராஜ்லு, இணைவேந்தர் சி.நாகராஜன், புலத்தலைவர்கள் நித்யானந்தம், ஜெயச்சோழன் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த இரண்டு கருத்தரங்குகளிலும் மாவட்ட கலெக்டர் டாக்டர் என்.சுப்பையன் பேசினார்.

‘‘100 சதவிகிதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், 100 சதவிகிதம் வாக்குப்பதிவு, 100 சதவிகிதம் நேர்மை இவை மூன்றும் சாத்தியமாவது உங்களைப் போன்ற இளைஞர்களால்தான் முடியும். நான் ஓட்டு போட்டு என்ன ஆகப்போகுது? வாக்காளர் பட்டியலில் சேர்த்தால் என்ன? சேர்க்காவிட்டால் என்ன... என்று நினைப்பது தவறு. நாம் ஒவ்வொருவரும் கடமையைச் சரியாகச் செய்தால் தான், உரிமையைப் பெற முடியும். ‘என் வாக்கை விற்பனைக்கு உள்ளாக்க மாட்டேன்’ என்பதை உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். தேர்தல் என்பது யாருக்காகவோ யாரோ நடத்துவது இல்லை; நமக்காக நாம் நடத்திக்கொள்வது. அன்றாட வாழ்க்கை முறையை ஒவ்வோர் அசைவையும் தீர்மானிக்கக்கூடிய சக்தியாக அரசியல் திகழ்கிறது. ஒவ்வொரு தீர்மானத்தையும் அரசைத் தீர்மானிக்கிறது. அந்த அரசு தீர்மானிக்கிற பொறுப்பு, உங்கள் கையில் இருக்கிறது’’ என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்