‘என்னய்யா இப்படி பண்றீங்களேய்யா?’ - கருணாநிதிக்கு உடன்பிறப்பின் கடிதம்

மதிப்புக்குரிய தலைவர் கலைஞர் அவர்களுக்கு ஓர் உண்மைத் தொண்டனின் கடிதம்!

இந்தக் கடிதத்தை நீங்கள் படிப்பீர்கள் என்பது குறித்து எள்ளளவும் சந்தேகம் இல்லை. காரணம் தி.மு.க குறித்தும் தங்களைக் குறித்தும் வரும் எந்தச் சிறு செய்தியையும் நீங்கள் படிக்கத் தவற மாட்டீர்கள். உண்மையில் தங்களின் அரசியல் வெற்றி ரகசியங்களில் அதுவும் ஒன்று என்பதை நன்கறிந்தவன் நான்.

நலமாக இருக்கிறீர்களா? நான் உங்களை நலம் விசாரிப்பது, உங்கள் மீதான அன்பினால் மட்டுமல்ல... சமீப காலங்களில் நமது கழகத்தில் நடந்துவரும் சில விஷயங்களை மனதில் கொண்டும்தான். நலமாக இருந்திருப்பீர்கள் என்றால், இந்தக் கூத்துக்களை அரங்கேற்ற விட்டிருக்கமாட்டீர்கள். தேர்தல் களப்பணியாற்ற உங்கள் கடிதத்தை எதிர்பார்த்து, முரசொலிக்காகக் காத்துக்கொண்டிருக்கிற என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது, கடந்த சில நாட்களாக நாளிதழ் களில் நமது கழகம் சார்பாக வரும் விளம்பரங்கள். அவை விளம்பரங்கள் அல்ல... தி.மு.க-வின் நியூ வெர்ஷன். (அப்படித்தான் சொல்கிறார்கள் இளைஞர் அணியைச் சேர்ந்த சில ‘மூத்தவர்கள்’) நான் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் வீரியத்தை உணராதவன் என்று எண்ணி விடாதீர்கள். பாரதியார் இறந்த தகவல் பல மாதங்கள் கழித்துதான் பலருக்குத் தெரியவந்ததாகச் சொல்வார்கள். ஆனால், இன்று சிம்பு வெளியிட்டதாகக் கூறப்படும் ‘பீப்’ பாடல், 10 நிமிடங்களில் பல லட்சம் பேரை எட்டிவிட்டது. சமூக வலைதளங்கள் படுத்தும்பாடு அது. தி.மு.க அதைப் பயன்படுத்திக்கொள்ளும் யுக்தி குறித்துதான் என் மனக்கசப்பும், இந்தக் கடிதமும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்