“அவர் இன்னமும் எங்கள் கூட்டணியில்தான் இருக்கிறார்!”

விஜயகாந்த் முடிவு... விவாதிக்கும் தலைவர்கள்!

ட்டமன்றத் தேர்தலில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ‘என் வழி தனி வழி’ என அறிவித்துவிட்டார். ‘நீ வருவாய் என’ என்று எதிர்பார்த்துக் காத்திருந்த தி.மு.க., பி.ஜே.பி கட்சிகளின் தலைவர்களும், மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களும் அடுத்தகட்டம் குறித்து தீவிர ஆலோசனையில் இறங்கியிருக்கிறார்கள். விஜயகாந்த்தை எதிர்பார்த்து இருந்த அவர்களுக்கு இது ஏமாற்றமா? என்ற கேள்வியை அவர்கள் முன் வைத்தோம்.

க.பொன்முடி (தி.மு.க.): “எங்களுக்கு ஏமாற்றம் எல்லாம் ஒன்றும் இல்லை. எந்தக் கூட்டணியாக இருந்தாலும், கலைஞர் தலைமையில் நல்லாட்சி அமைப்போம்” என்றார் சுருக்கமாக.

மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் (பி.ஜே.பி.):
“ஒவ்வொரு கட்சிக்கும் தனிக்கொள்கை உண்டு. அந்த அடிப்படையில்தான் விஜயகாந்த் தனது முடிவை அறிவித்திருக்கிறார். எங்கள் தரப்பில் என்ன முடிவெடுப்பது என்பது பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறோம். இப்போதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தே.மு.தி.க., பா.ம.க இரண்டும் அங்கம் வகிக்கின்றன. அவர்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கம்தான். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக ஓர் அணியை உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் திட்டம். அதற்கு உண்டான அணியை உருவாக்குவோம். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் இருக்கின்றன.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்