கழுகார் பதில்கள்!

டி.சி.இமானுவேல், மயிலாடுதுறை.

 ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன் இவர்களின் நடவடிக்கைகளைப் படிக்கும்போது செங்கோட்டையன் எவ்வளவோ மேல் என்று சொல்லலாமா?


  அப்படிச் சொல்லிவிட முடியாது. செங்கோட்டையனுக்கு கொஞ்சம் பயம் இருக்கும். அது இவர்களுக்கு இல்லை. அதுதான் வித்தியாசம். பெண் எம்.பி ஒருவரின் கணவர், வாட்ஸ் அப்பில் உலவ விட்டுள்ள ஆடியோவை நீங்கள் இன்னும் கேட்கவில்லையா?

இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

 ‘பி.ஜே.பி ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் யாரும் ஆட்சி அமைக்க முடியாது’ என்று எதை வைத்துச் சொல்கிறார் தமிழிசை செளந்தர்ராஜன்?

 புதிய ஆட்சி அமைந்ததும், அந்த ஆட்சியில் உட்காருபவருக்கு தமிழிசை வாழ்த்துச் செய்தி அனுப்புவார் அல்லவா? அதை வைத்துச் சொல்கிறாரோ என்னவோ?

முனைவர் ச.மணி, கும்பகோணம்.

 விஜயகாந்த்துக்கு ஊடகங்கள் இவ்வளவு முக்கியத்துவம் கொடுப்பது தேவைதானா?

 ஐந்து முதல் எட்டு சதவிகித வாக்குகளைக் கொண்ட கட்சியாக தே.மு.தி.க இருக்கிறது. அவருக்கு 41 சட்டமன்றத்  தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. அவருக்கு 14 நாடாளுமன்றத் தொகுதிகளை பி.ஜே.பி ஒதுக்கியது. நான்கைந்து முறை அவரை கருணாநிதி வெளிப்படையாகவே அழைத்துவிட்டார். இதை வைத்துப் பார்க்கும்போது அவருக்கு செல்வாக்கு இருப்பதை மோடி, கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரே ஒப்புக்கொண்டதாகத்தானே தெரிகிறது? விஜயகாந்த்துக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க உண்மையான காரணம் இதுதான்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்