மிஸ்டர் கழுகு: பன்னீர்... கஜானா தேடும் படலம்!

விறுவிறுவென உள்ளே வந்த கழுகார், விஜயகாந்த் பற்றி எடுக்கப்பட்ட திடீர் சர்வே பக்கங்களை வாங்கிப் பார்த்து... சிரித்தபடி நம்மைப் பார்த்தார். ‘‘தனித்துப் போட்டி என்ற திடீர் முடிவை விஜயகாந்த் ஏன் எடுத்தார், எதற்காக அவர் மகளிர் தின விழாவுக்கு வந்து மைக் பிடித்தார் என்ற சர்ச்சை தே.மு.தி.க-விலேயே தொடங்கிவிட்டது. சில மாவட்டச் செயலாளர்கள், சில எம்.எல்.ஏ-க்கள் போனை ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு பதுங்கிவிட்டார்கள். அவர்களை அடிமட்டத்தில் இருக்கும் நிர்வாகிகள் கோபமாகக் கேட்கிறார்களாம்.

தி.மு.க-வுடன் கூட்டணி வைத்துக் கொள்வார் என்றுதான் பெரும்பாலான நிர்வாகிகள் நினைத்தார்கள். இல்லையென்றால், பி.ஜே.பி அல்லது மக்கள் நலக் கூட்டணியிலாவது சேருவார் என்று எதிர்பார்த்தார்கள். எதுவுமே இல்லாமல் தனித்துப் போட்டி என்று அறிவித்தது கட்சிக்காரர்களை அதிர்ச்சி அடைய வைத்துவிட்டது.”

‘‘பிரேமலதாதான் இதற்குக் காரணமா?”

‘‘தி.மு.க., அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளோடும் கூட்டுச் சேர வேண்டாம் என்றும் பி.ஜே.பி-யுடன் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்றும் சொல்லி வந்தார் பிரேமலதா. பி.ஜே.பி தன்னை மதிக்கவில்லை என்ற கோபம் விஜயகாந்த்துக்கு இருந்தது. அதனால், அவருக்கு பி.ஜே.பி கூட்டணியில் விருப்பம் இல்லை. சுதீஷும் தி.மு.க கூட்டணிக்குப் போகலாம் என்று சொல்லிவந்தாராம். ஆனால், பிரேமலதா சொன்னதுதான் நடந்தது.”

‘‘பிரேமலதாவுக்கு அட்வைஸ் சொல்வது யார்?”

‘‘பிரேமலதாவின் அக்கா கணவர் ‘லீக்’ க்ளப் ராமச்சந்திரன், புதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி வைத்துள்ளார். அவர் இந்த முடிவின் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.”

‘‘மக்கள் நலக் கூட்டணியில் விஜயகாந்த் சேருவதாகச் செய்தி பரப்புகிறார்களே?”

“பரப்புகிறார்கள். ஆனால், அதற்கான முயற்சிகள் இல்லை. தன்னை நோக்கி இந்த மக்கள் நலக் கூட்டணித் தலைவர்கள் வருவார்கள் என்று விஜயகாந்த் எதிர்பார்த்தாராம். விஜயகாந்த் நம்மை நோக்கி வரட்டும் என்று வைகோ உள்ளிட்ட தலைவர்கள் நினைக்கிறார்களாம். விஜயகாந்த்தின் அறிவிப்புக்குப் பிறகு வைகோ உள்ளிட்ட தலைவர்கள் வெளியிட்ட அறிக்கையின் சில வாசகங்களைக் கவனித்தால் புரியும்.”

‘‘என்ன சொல்லி இருக்கிறார்கள்?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்