“காலியான பிறகும் சர்... சர்... என உறிஞ்சுகிறார்கள்!

அரசை விமர்சிக்கும் பழ.கருப்பையா!

பழ.கருப்பையா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கிவிட்டார்!

ஜனதா தள தலைவர் ஜான் மோசஸின் பாரதிய தேசிய பேரவை சார்பாக மதுரை விக்டோரியா எட்வர்ட் மன்றத்தில் கடந்த 13-ம் தேதி, பாரதி சிந்தனை கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘நெஞ்சு பொறுக்குதில்லையே’ என்ற தலைப்பில் பழ.கருப்பையா பேசினார். அவரது பேச்சைக் கேட்க பல்வேறு கட்சிகளின் தொண்டர்கள் மட்டுமின்றி குறிப்பெடுக்க உளவுத்துறையினரும் குவிந்திருந்தனர்.

வழக்கமான பாணியில் தென்றலாகப் பேச்சைத் தொடங்கிய பழ.கருப்பையா, இடி மின்னலாகக் கொட்டித் தீர்த்துவிட்டார். “எனக்குக் கொடுத்த தலைப்பு ‘நெஞ்சு பொறுக்குதில்லையே.’ பாரதி 100 வருடங்களுக்கு முன்பே, நம் மக்களையும் அரசியலையும் நினைத்து கோபத்துடன் பாடினான். இன்றும் அந்த நிலை தொடர்கிறது. ‘நிலை கெட்ட மனிதன்’ என்று பாடினான். நிலைகெட்ட என்றால், மானம் கெட்ட என்று பொருள். மானம் என்பதற்கு நிலை தாழாமை என்கிறார் பரிமேலழகர். ‘பணம் வந்தால் பணிவு வர வேண்டுமென்றும், வறுமை வந்தால் நிமிர்ந்து நிற்க வேண்டும்’ என்றும் வள்ளுவர் கூறுகிறார். ஆனால் இன்று, தகுதியில்லாதவர்களிடம் பணம் சேர்ந்து விட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்