பெரியோர்களே... தாய்மார்களே! - 72

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

மிழகம் ரத்தத்தில் தோய்ந்த ஆண்டு 1965. இனத்தின் விழியாம் மொழியைக் காக்க, உயிராம் உயிரைத் தந்த ஆண்டு.

‘‘நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட பயங்கரச் சிக்கலில், சென்னை ரத்தத் தடாகத்தில் குதித்து எழுந்தது. பெரியவர்களின் கூற்றுப்படி 1942 ஆகஸ்ட் புரட்சியைவிட இது கடுமையாக இருந்தது. வெள்ளையனே வெளியேறு இயக்கம் நகரத்தில் மட்டும் இருந்தது... மொழிக் கிளர்ச்சி நகர எல்லையைத் தாண்டி கிராமத்துக்கும் பரவியது” என்று அன்று ‘ஸ்டேட்ஸ்மேன்’ பத்திரிகை எழுதியது.

1965 ஜனவரி 25 முதல் மார்ச் 15 வரை 50 நாட்கள் தமிழகம் அனலாய் அச்சம் தரத்தக்க மாநிலமாய் மாறிப்போனது. தமிழகத்தில் அப்போது இருந்த 33 ஆயிரம் காவலர்கள் போதாது என்று ஆந்திரா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து காவலர்கள் வரவழைக்கப் பட்டார்கள். இவையும் போதாது என்பதால் 5 ஆயிரம் ராணுவ வீரர்கள் வந்தார்கள். தமிழகத்தின் பள்ளி, கல்லூரி மாணவர்களை அடக்க ராணுவம் முதன்முதலாக தமிழகத்துக்குள் வந்தது.

தமிழ்நாட்டில் 40 இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. 70 இடங்களில் கண்ணீர் புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 400-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தார்கள். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். கைதுசெய்யப்பட்டு சிறைவைக்கப்பட்ட 5 ஆயிரம் பேரில் 2 ஆயிரம் பேர் 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள். 25 அஞ்சல் நிலையங்கள் தாக்கப்பட்டன. 5 அஞ்சல் நிலையங்களுக்குத் தீ வைக்கப்பட்டன. 8 பேருந்துகளுக்குத் தீ வைக்கப்பட்டன. 25 புகை வண்டி நிலையங்கள் தாக்கப்பட்டன. 10 புகை வண்டி பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டன. 5 அரசு அலுவலகங்களும், ஒரு தொலைபேசி நிலையமும் கொளுத்தப்பட்டன. 5 காவல் நிலையங்கள், ஒரு பஞ்சாலை, ஒரு திரையரங்கம் தீ வைக்கப்பட்டன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்