வைஃபை... லிஃப்ட்... குளுகுளு அறைகள்!

ஹைடெக்கில் கருணாநிதி, ஜெயலலிதா பிரசார வேன்கள்...

ஜெயலலிதா, கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களுக்கானப் பிரசார வேன்கள் கோவையில் தயாராகி வருகின்றன. பிரசாரத்துக்கு வருவாரா, மாட்டாரா எனக் கேள்வி எழுந்துள்ள சூழலில், ஜெயலலிதாவுக்காகச் சொகுசுப் பிரசார வாகனங்களும்கூடத் தயாராகின்றன. இரு பிரசார வாகனங்கள், இரு ஓய்வு வாகனங்கள் என அவருக்காக 4 வாகனங்கள் தயாராகி வருகின்றன.

ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி பிரசார வேனுக்கு மாறி, எல்லா இடங்களிலும் வேனில் இருந்தபடி பிரசாரம் செய்யும் வகையில், இந்த வாகனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. பிரசார வாகனத்தில் நடுப்பகுதியில் இருக்கும் இருக்கை சுழலும் வகையில், ஹைட்ராலிக் லிஃப்ட் வசதியுடன் மேலும் கீழும் ஏற்றி, இறக்கும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கூட்டத்தில் பிரசாரம் செய்யும்போது, ஜெயலலிதா சுழலும் இருக்கையில் அமர்ந்திருப்பார். ஸ்விட்ச் ஒன்றை தட்டினால், வேனில் உள்ள லிஃப்ட்,  மேற்கூரைக்கு ஜெயலலிதாவைக் கொண்டு செல்லும். இது, பொதுக்கூட்ட மேடையில் பேசுவது போன்ற தோற்றத்தைத் தரும் என்கிறார்கள். பிரசாரம் முடிந்ததும், முன் இருக்கைக்கு அவர் வந்துவிடுவார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்