அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

ற்போது அ.தி.மு.க-வினர் மத்தியில் ஒரே பரபரப்பு, யாருக்கு சீட் என்ற விவகாரம்தான். முன்னாள், இன்னாள் அமைச்சர்கள்... எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சிப் பிரமுகர்கள் என ஆயிரக்கணக்கானோர், எப்படியாவது சீட் வாங்கிவிட வேண்டும் என்று பல ரூட்களில் முயன்று
வருகிறார்கள். அ.தி.மு.க-வில் யார் யார் சீட் கேட்கிறார்கள், யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்பது பற்றிய விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அது, இந்த இதழிலும்...

மதுரை மாவட்டம்

மதுரை தெற்கு:
அமைச்சர் செல்லூர் ராஜுவின் ஆதரவுபெற்ற, திரைப்படத் தயாரிப்பாளர் அன்புச்செழியன் இந்தத் தொகுதியைக் கேட்டிருக்கிறார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரை, வில்லாபுரம் ராஜா, மண்டலத் தலைவர் சண்முகவள்ளி, ஜெயபால், இளைஞர் அணி முத்திருளாண்டி ஆகியோரும் சீட் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.

மதுரை கிழக்கு: சிட்டிங் எம்.எல்.ஏ-வான தமிழரசன் மீண்டும் தனக்கு வாய்ப்புக் கிடைக்கும் என நம்பியிருக்கிறார். இவர் வரக் கூடாது என்று நினைக்கும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலரும், இந்தத் தொகுதிக்கு விருப்ப மனுக்கள் கொடுத்துள்ளனர். முக்கியமாக மேற்கு யூனியன் துணை சேர்மன் கலைவாணி, மாநகர அவைத் தலைவர் புதூர் துரைப்பாண்டி, ஆனையூர் சரவணன் ஆகியோர் ரேஸில் இருக்கிறார்கள். மாநகராட்சி கவுன்சிலர் சண்முகப்ரியாவுக்கு சீட் வழங்க சிபாரிசு செய்கிறாராம், புறநகர் மாவட்டச் செயலாளரான ராஜன் செல்லப்பா.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்