கழுகார் பதில்கள்!

இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.

 ‘தனித்துப் போட்டி’ என்ற அறிவிப்பால் விஜயகாந்த்தின் இமேஜ் கூடி உள்ளதா?


 இந்த முடிவை ஒரு மாதத்துக்கு முன்பே எடுத்திருந்தால், அவரது செல்வாக்கு தக்கவைக்கப்பட்டு இருக்கும். கூடி இருக்குமா என்று சொல்ல முடியாது. ஆனால், இப்போது சரிந்துள்ளது என்பதைத்தான் விகடன் டீம் எடுத்த கருத்துக் கணிப்பு சொல்கிறது.

சத்தி.கமலேஸ்வரன், பெரியநாயக்கன்பாளையம்.

 விஜயகாந்த் தனித்து நிற்பதால், ‘ஜெயலலிதாவின் வெற்றி சுலபம் ஆகிவிடும்’ என்று கருதுகிறீர்களா?


   எல்லோருமே கட்சிகள் என்ன முடிவுகள் எடுக்கும், யார் யாரோடு சேர்ந்தால் வெற்றி பெற முடியும் என்றுதான் யோசிக்கிறார்கள். மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பார்க்கவில்லை. தேர்தல் வெற்றி என்பதைக் கூட்டணி அமைப்பதும், அமைக்காமல் போவதும் ஓரளவுதான் பாதிக்கும். மக்கள் மனநிலை எதை நோக்கியதாக இருக்கிறது என்பதுதான் மிகமிக முக்கியமானது. மெகா கூட்டணிகள்கூட மக்களின் மனநிலைக்கு முன்னதாக மண்ணைக் கவ்வி உள்ளன.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

 கள்ளச்சாராயம் காய்ச்சினால் மரண தண்டனை என்று பீகார் மாநிலத்தில் சட்ட மசோதா தயாராகி வருகிறதே?


 சாராயத்தில் நல்ல சாராயம், கெட்ட சாராயம் என்று இருக்கிறதா? அரசாங்கம் மட்டுமே சாராயம் தயாரிக்க வேண்டும். அரசாங்கத்துக்குத் தெரியாமல் தனி மனிதர்கள் தயாரித்தால் அதற்குக் கெட்ட சாராயம் என்று பெயர். எந்தச் சாராயம் காய்ச்சினாலும் மரண தண்டனை என்று பீகார் மட்டுமல்ல, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுமே சட்டம் இயற்ற வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்