மிஸ்டர் கழுகு: விஜயகாந்த்துக்கு போன் செய்த ராகுல்!

திசை மாறுகிறதா தே.மு.தி.க.?

‘‘கூட்டணிகள் எப்போது முடிவு ஆகும்.... கட்சிகள் எப்போது தேர்தல் பணிகளைத் தொடங்கும்?” என்பதுதான் கழுகாரைப் பார்த்ததும் நாம் கேட்ட கேள்வி.

‘‘இப்போதே வேட்பாளர் பட்டியலை தலைமை வெளியிட்டுவிடக் கூடாது என்று, வேட்பாளர்கள் சாமியைக் கும்பிட்டபடி இருக்கிறார்கள். இப்பவே அறிவித்துவிட்டால், இரண்டு மாதங்களுக்குப் பணத்தை யார் செலவு செய்வது என்பதுதான் அவர்களது கவலை!” என்ற கழுகார் தொடர்ந்தார்.
‘‘கூட்டணிகள் இறுதி நிலவரத்தை அடைய இந்த மாதம் இறுதி ஆகலாம். அதற்குள் எத்தனையோ மாற்றங்கள் நடக்கலாம்.

‘இந்தத் தடவை தனியாகத்தான் நிற்பேன்’ என்று விஜயகாந்த் அறிவித்ததை ஜெயலலிதா நம்பவில்லை. விஜயகாந்த் மீது அவருக்கு இன்னமும் சந்தேகம் இருப்பதாகச் சொல்கிறார்கள். யாரையும் கடுமையாகப் பேசும் விஜயகாந்த், அந்தக் கூட்டத்தில் கருணாநிதியை ஏன் விமர்சிக்கவில்லை என்பதுதான் ஆளும் கட்சியின் சந்தேகமாம். அவர்கள் சந்தேகப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளன.”

‘‘இன்னும் ஏன் விஜயகாந்த் மீது சந்தேகம்? அவர்தான் ‘தனித்துப் போட்டி’ என்று அறிவித்துவிட்டாரே?”

‘‘விஜயகாந்த்தின் இந்த அறிவிப்பு, தி.மு.க-வைவிட காங்கிரஸ் கட்சிக்கும் அதிகப்படியான அதிர்ச்சியைக் கொடுத்துள்ளதாம். இந்தச் சட்டமன்றக் கூட்டணியை அடுத்து வரப்போகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகப் பார்க்கிறதாம் காங்கிரஸ் மேலிடம். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க., காங்கிரஸ், தே.மு.தி.க ஆகிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து சந்தித்தால் அதே கூட்டணியை நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடரலாம். அது கணிசமான எண்ணிக்கையிலான எம்.பி-க்களை டெல்லிக்கு அனுப்ப அடித்தளமாக அமையும் என்று காங்கிரஸ் நினைத்தது. எனவே, விஜயகாந்த் அறிவிப்பு காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த நிலையில்,  விஜயகாந்த்துடன் ராகுல் பேசியதாகச் சொல்லப்படுகிறது.”

‘‘அப்படியா?”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்