பெரியோர்களே... தாய்மார்களே! - 73

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

தி.மு.க எழுந்த ஆண்டு 1967 என்பது மட்டுமல்ல வரலாறு, காங்கிரஸ் விழுந்த ஆண்டு 1967. விழுந்ததில் தவறு இல்லை. விழுந்தே கிடப்பதுதான் தவறு. விழுந்தது ஏன் என்று உணராமல் இருப்பது மாபெரும் தவறு.

காங்கிரஸின் எல்லாத் தவறுகளுக்கும் காரணமானவராகச் சுட்டிக்காட்டப்படும் பெரியவர் பக்தவத்சலம், 1967 தேர்தல் தோல்விகளுக்கு என்ன காரணம் என்பதை பட்டவர்த்தனமாக எழுதினார். ஓர் ஆட்சியின் சாதக பாதகங்களையும் தனது இயலாமையையும் சொல்லித் தமிழக அரசியலில் தன்னிலை விளக்கம் கொடுத்த ஒரே முதலமைச்சர் பக்தவத்சலம் மட்டும்தான்.

‘‘இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி, எனக்கு ஏற்பட்ட ஒரு பெரும் சவால்” என்பதை பக்தவத்சலம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டார். ‘‘Kairon was shot dead... why not Bhakthavatsalam?’’ - என்று சென்னையின் பெரும்பாலான தெருக்களில் எழுதப்பட்டு இருந்தது? மாணவர் போராட்டத்தின் பல்வேறு பரிமாணங்களைப் பார்க்கத் தவறிய, உணர்ந்தாலும் அதனை உள்வாங்க விரும்பாத பக்தவத்சலம், காவல் துறையை மட்டுமே வைத்து கணக்குத் தீர்க்க முயற்சித்தார். அன்றைய காங்கிரஸ் தலைவர் காமராஜர், முதலமைச்சர் பக்தவத்சலம், உள்துறை அமைச்சர் கக்கன் ஆகிய மூவருக்கும் முரண்பட்ட யோசனைகள் இருந்துள்ளன. அது மட்டுமல்ல, காவல் துறைக்கு வெவ்வேறு உத்தரவுகளும் போடப்பட்டு உள்ளன. மதுரையில் கொடூரமான போலீஸ் தாக்குதல் நடந்தபோது உள்துறை அமைச்சர் கக்கன், மதுரையில்தான் இருந்தார். ஆனால், பக்தவத்சலமே குற்றவாளி ஆக்கப்பட்டார். தனி மனிதர்கள் மீது பழியைப் போட்டுவிட்டு ஒரு கட்சியும், சமூகமும் தப்பிப்பது காலம் காலமாக நடப்பதுதான். முதலமைச்சர் நீங்கலாக அனைவரும், இதற்கும் நமக்கும் சம்பந்தமில்லை என்று இருந்துள்ளார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்