காஞ்சி கலெக்டரின் கலக்கல் யுக்தி...

காஸ் சிலிண்டர், தண்ணீர் கேன், சுவரொட்டிகள், ராட்சத பலூன்கள், பேரணிகள், வீதி நாடகம், கலைக்குழுக்கள் என அனைத்து வழியிலும் வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையத்தின் விழிப்பு உணர்வுப் பிரசாரத்தைக் கொண்டு செல்கிறார் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி. புதிய யுக்திகள் மூலம் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமி செய்யும் இந்தப் பிரசாரம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

கேஸ் சிலிண்டர்கள் வழியாக, வாக்காளர் விழிப்பு உணர்வு அட்டைகளைக்கொண்டு செல்வது ரொம்பவே ரீச் ஆனது. இதற்காக 6 கேஸ் ஏஜென்ஸிகள் மூலம் 60,000 கேஸ் சிலிண்டர்களில் நூலில் கட்டி வீடுகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது. கேஸ் சிலிண்டரில் எதுவும் ஒட்டக் கூடாது என்பதால், நூலில் பிரசார வாசகங்கள் அடங்கிய அட்டைகளைக் கட்டியிருந்தார்கள். தினமும் கேஸ் சிலிண்டரைப் பயன்படுத்தும்போது, அந்த வாசகங்கள் கண்ணில்படுவது போன்று தொங்கவிடப்படுகின்றன. அதுபோல 10 ஆயிரம் 20 லிட்டர் வாட்டர் கேன்களில் தேர்தல் விழிப்பு உணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை ஒட்டி வீடுகளுக்கு அனுப்புகின்றனர். வீட்டில் உள்ளவர்கள் ஒருநாளைக்கு ஐந்து முறையாவது தண்ணீர் குடிப்பார்கள். ஒவ்வொரு முறை தண்ணீர் குடிக்கச் செல்லும்போதும் அந்த விழிப்பு உணர்வு வாசகங்கள் கண்ணில் தென்படும்.  அதுபோல சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,000 பெண்களை வரவழைத்து, வாக்களிப்பதன் அவசியம் குறித்து பேசியிருப்பதும் பெண்களைக் கவர்ந்திருக்கிறது. தேர்தல் பணியில் பரபரப்பாக இருந்த மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்