அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்குவதற்கு அ.தி.மு.க பிரமுகர்கள், தங்களுக்குத் தெரிந்த ரூட்களில் எல்லாம் முட்டிமோதுகிறார்கள். யார் யார் சீட் கேட்கிறார்கள்? யார் யாருக்கு சீட் கிடைக்கும் என்ற நிலவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இந்த இதழில்...

தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி: சிட்டிங் எம்.எல்.ஏ-வாக இருக்கும் சி.த.செல்லப்பாண்டியன், மீண்டும் சீட் கேட்கிறார். 2004 நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு தோல்வியைத் தழுவிய அமிர்தகணேசன், தூத்துக்குடி ஒன்றிய முன்னாள் கவுன்சிலர் சந்தனம், தற்போதைய அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன், நகராட்சி முன்னாள் கவுன்சிலரும் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான ஜோதிமணி, மாவட்ட முன்னாள் செயலாளரும் நகர்மன்ற முன்னாள் தலைவருமான இரா.ஹென்றி, முன்னாள் எம்.எல்.ஏ-வும் தற்போதைய தொகுதிச் செயலாளருமான  வி.பி.ஆர்.ரமேஷ், மகளிர் அணி மாவட்டச் செயலாளர் குருத்தாய், மாநகராட்சி மேயர் அந்தோணி கிரேஸி மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்கள் உட்பட 150-கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருக்கிறார்கள். சி.த.செல்லப் பாண்டியன், அமிர்தகணேசன், சந்தனம், ஜோதிமணி, குருத்தாய் ஆகியோரில் ஒருவருக்கு சீட் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்