“நல்ல வேட்பாளர் யார்?”

நம் விரல்... நம் குரல்! கருத்தரங்கம்

ந்திய தேர்தல் ஆணையம், விகடன் குழுமம், தி சென்னை ஸ்கூல் ஆஃப் பேங்கிங் சார்பாக, ‘நம் விரல்... நம் குரல்’ என்ற ‘தமிழக சட்டமன்றத் தேர்தல் - 2016 விழிப்பு உணர்வு கருத்தரங்கம்’ சேலம் மாவட்டம் சங்ககிரி விவேகானந்தா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், சங்ககிரி ஆர்.டி.ஓ பால் பிரின்ஸ் ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் நடந்த விழிப்பு உணர்வுக் கருத்தரங்கில் ஆர்.டி.ஓ மகாத்மா, கல்லூரி முதல்வர் சுரேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இரண்டு கல்லூரிகளிலும் நடைபெற்ற கருத்தரங்கில் திரைப்பட இயக்குநரும், எழுத்தாளருமான பாரதி கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். கருத்தரங்கில் தேர்தல் விழிப்பு உணர்வு குறித்து மாணவிகளும் பேசினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்