ஆளை மாத்தி... அடித்துத் துவைத்து!

தலைநகரில் ஒரு நிஜ ‘விசாரணை’

காவல் துறையினரின் காட்டு மிராண்டித்தனமான அத்து மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் சமீபத்தில் வெளியான ‘விசாரணை’ திரைப்படம் தோலுரித்துக் காட்டியது. அந்தப் படத்தில் வருவதுபோன்ற ஒரு கொடூரச் சம்பவம் சென்னையில் அரங்கேறியிருக்கிறது.

சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரைச் சேர்ந்த இளைஞர் முகேஷ், செய்யாத குற்றத்தை ஒப்புக்கொள்ளுமாறு போலீஸார் அடித்து நொறுக்கியதால், கடுமையான காயங்களுடன் மருத்துவ மனையில் சிகிச்சைபெற்று வருகிறார். முகேஷின் தாயார் சுமதியிடம் பேசினோம். “11-ம் தேதி ராத்திரி 11 மணிக்கு மயிலாப்பூர் போலீஸ் எங்க வீட்டுக்கு வந்தாங்க. ‘உன் பையனை விசாரிக்க வேண்டி இருக்கு’னு சொல்லிட்டு, என் கண் முன்னாடியே முகேஷை, கண்மூடித்தனமா லத்தியால அடிச்சு ஜீப்ல ஏத்திட்டுப் போனாங்க. மயிலாப்பூர் ஸ்டேஷனுக்கு ஓடுனோம். அங்கே அவன் இல்லை. போலீஸும் விவரத்தைச் சொல்லல.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்