நாகர்கோவிலுக்கு சசிகலா ரகசியப் பயணம்!

பின்னணி விவரங்கள்...

மிழ்நாட்டில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்றுவரும் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கடந்த சனிக்கிழமை இரவு நாகர்கோவிலுக்கு வந்தார். அவருடன், அவரது அண்ணன் மகள் பிரபாவதியும் வந்திருந்தார்.

நாகர்கோவிலுக்கு சனிக்கிழமை இரவு 10 மணிக்கு வந்த சசிகலாவும் பிரபாவதியும் ஹோட்டல் ஒன்றில் தங்கினர். விஷயம் கேள்விபட்டு நாமும் ஆஜர் ஆனோம். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.55-க்கு ஹோட்டலில் இருந்து நாகர்கோவிலில் உள்ள பிரசித்திபெற்ற நாகராஜர் கோயிலுக்கு காரில் புறப்பட்டனர். அங்கு, பூஜை ஏற்பாடுகளைக் கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். இந்தக் கோயிலுக்குப் பெரும்பாலும் பெண் பக்தர்களே அதிகமாக வருவார்கள். ‘ஆயில்யம் நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், அந்த நாள் தனிச் சிறப்பு வாய்ந்தது’ என்கிறார்கள். அதிலும், ஆயில்யமும் பிரதோஷமும் சேர்ந்து வந்தால் இன்னும் சிறப்பாம். ஆயில்யம் நாகராஜருக்கும், பிரதோஷம் சிவனுக்கும் உகந்த நாள். இந்த நாளில் நாகராஜர் கோயிலில் அர்ச்சனை, பூஜை செய்தால் பெண்களுக்கு வயிறு, கர்ப்பப்பை, தோல் சம்பந்தமான நோய்களும் கஷ்டங்களும்  தீரும் என்பது நம்பிக்கை. ஓய்ந்துபோன வாழ்வு மேலோங்கும், நினைத்த காரியம் நிறைவேறும், வாழ்வில் வளமும் வெற்றியும் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்