கழுகார் பதில்கள்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

 விஜயகாந்த் பல்டி அடிக்க வாய்ப்பு இருக்கிறதா?


 வாய்ப்பு இருப்பதைப்போலத்தான் இருக்கிறது. காங்கிரஸ் மேலிடம் டெல்லியில் இருந்து சில முயற்சிகளை எடுத்து வருகிறது. தங்களை விஜயகாந்த் அவமானப்படுத்திவிட்டதாக தி.மு.க தலைமை நினைப்பதால், அவர்கள் தங்களது முயற்சிகளை நிறுத்திவைத்துள்ளார்கள். ‘தனித்துப் போட்டி’ என்ற அறிவிப்புக்குப் பின்னால் தே.மு.தி.க நிர்வாகிகள் மத்தியில் மாறுபட்ட எண்ணங்கள் உள்ளன. இவை அனைத்துமே விஜயகாந்த் நிலைப்பாட்டில் மாற்றம் இருப்பதை அறிவிக்கின்றன.

சந்தனா வசீகரன் சின்னதாத்தா, கருப்பம்புலம்.

 தமிழக பி.ஜே.பி-க்கு முதல்வர் வேட்பாளர் கிடையாதாமே?


 யாரை அறிவிப்பது என்பதில் ஏற்படும் குழப்பம்தான் இதற்குக் காரணமாக இருக்கும்.

கே.ஜி.ஸ்ரீராமன், பெங்களூரு.

 தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், பி.ஜே.பி., பா.ம.க ஆகிய ஐந்து கட்சிகளையும் மக்கள் நலக் கூட்டணியில் சேர்க்க மாட்டோம் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிச் செயலாளர் முத்தரசன் சொல்லி இருக்கிறாரே?


  முக்கியமான ஐந்து கட்சிகள் பெயரையும் சொல்லிவிட்டார் முத்தரசன். மக்கள் நலக் கூட்டணியில் இருக்கும் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கட்சியைப் பிடிக்காது. தி.மு.க-வும் காங்கிரஸும் வைகோவுக்கு ஆகாது. கம்யூனிஸ்ட்களுக்கு பி.ஜே.பி பிடிக்காது. பா.ம.க-வும் விடுதலைச் சிறுத்தைகளும் ஒரே இடத்தில் இருக்க முடியாது. ஆளும் அ.தி.மு.க-வுடன் கூட்டுச்சேரத் தயார் என்று சொல்ல முடியாது. எனவே, ஐந்து கட்சிகளுக்கும் தடுப்பணை போட்டுவிட்டார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்