மிஸ்டர் கழுகு: ‘சுப்ரீம் லேடி’ ஆகிறாரா சசிகலா?

வேட்பாளர் செலக்‌ஷன்... ஐவர் அணி மீது ஆக்‌ஷன்... பரபரக்குது எலெக்‌ஷன்!

ன்ட்ரி ஆனார் கழுகார். டேபிளில் இருந்த திவாகரன் மேட்டரைப் படித்துவிட்டு நிமிர்ந்த கழுகார், ‘‘வேட்பாளர் செலக்‌ஷன், ஐவர் அணி மீது ஆக்‌ஷன்... என கை ஓங்க ஆரம்பித்திருப்பதால், ‘சுப்ரீம் லேடி’ ஆக மாறி வருகிறார் சசிகலா’’ என முன்னோட்டம் கொடுத்துச் செய்திகளைக் கொட்ட ஆரம்பித்தார்.

‘‘மார்ச் 22-ம் தேதி மாலை முதல் 23-ம் தேதி வரை பௌர்ணமி நேரம். ஜோதிடர்கள் ஆலோசனைப்படி, அந்த நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியாகலாம் என்று கட்சிக்காரர்கள் எதிர்பார்க்கிறார்கள். பொதுவாக, தொகுதிக்கு மூன்று பேர் கொண்ட லிஸ்ட்டை மாவட்டச் செயலாளரிடம் கேட்டு வாங்குவார் ஜெயலலிதா. இந்த முறை அதைக்கூடச் செய்யவில்லை. இந்த சிஸ்டத்திலும் ஏதாவது வசூல் வேட்டை நடந்துவிடும் என உஷாராக இருந்திருக்கிறார்.  உளவுத்துறை எடுத்த லிஸ்ட்டை சலித்துச் சல்லடை போட்டு அலசி, இறுதிக்கட்டமாக நேர்முகத்தேர்வுக்காக மாவட்டங்களில் இருந்து சொற்பமா னவர்களை சென்னைக்கு அழைத்து இருக்கிறார்கள். இப்படி அழைக்கப் பட்டவர்கள் பலருக்கும் சசிகலா குடும்பத்தினரின் ஆசி உண்டாம். 2011 சட்டசபைத் தேர்தலின்போது மன்னார்குடி சேனலின் பல கிளைகள் மூலம் பலரும் சீட் வாங்கினார்கள். ஆனால், இப்போது சசிகலா கண் எதிரே வேட்பாளர் செலக்‌ஷன் நடக்கிறதாம். வேட்பாளர் பட்டியலில் இப்படி கை ஓங்கியதோடு ஐவர் அணியின் மீது அதிரடி ஆக்‌ஷன்கள் பாய ஆரம்பித்திருக்கின்றன.’’

‘‘ஓஹோ!’’

 ‘‘இதிலும் சசிகலாவின் செல்வாக்கு உண்டாம். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் மூவருக்கும் அடுத்தடுத்து அதிர்ச்சிகள் கொடுத்துக்கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. பழனியப்பனின் ஆதரவாளரான தர்மபுரி மாவட்டச் செயலாளர் பூக்கடை முனுசாமியை நீக்கியிருக்கிறார்கள். புதிய மாவட்டச் செயலாளராக கே.பி.அன்பழகன் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், பழனியப்பன் ஆகியோர் மீதான ஆக்‌ஷன்கள் நிற்கப் போவதில்லை. ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான தேனி மாவட்டச் செயலாளர், நத்தம் ஆதரவாளரான திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஆகியோர் டம்மி பதவிகளுக்கு மாற்றப்படலாம். திருவாரூர் மாவட்டச் செயலாளராக தற்போது இருக்கும் ஆர். காமராஜின் பதவிக்கும் ஆபத்து என்பதுதான் அ.தி.மு.க-வின் இப்போதைய டாக்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்