திராவிடத்தை அழிக்கவந்த ஆரியப் பெண்மணி!

தி.க. மாநாட்டில் பழ.கருப்பையா ஆவேசம்

திராவிடர் கழகத்தின் சார்பில் சாதி - தீண்டாமை ஒழிப்பு, சமூகநீதி மாநாடு கடந்த 19, 20 ஆகிய தேதிகளில்  திருச்சி சிறுகனூரில் நடைபெற்றது. ஆளும் கட்சியையே விஞ்சும் அளவுக்குப் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருந்தது. மாநாட்டு முகப்பில் தந்தை பெரியார் காட்சியளிக்க, மாநாட்டுப் பந்தலுக்கு புரட்சியாளர் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டு இருந்தது. குஜராத் உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர்.கோகுல கிருட்டிணன் மாநாட்டுக் கண்காட்சியைத் திறந்துவைத்தார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோரின் பெயர்கள் அழைப்பிதழில் இருந்தன. ஆனால், தேர்தல் காரணமாக அவர்கள் வரவில்லை. உடல்நிலை சரியில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் வரவில்லை. குஷ்புவும்  ஏனோ வரவில்லை.

ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான், “அம்பேத்கரும், பெரியாரும் நாணயத்தின் இருபக்கங்கள்போல. இவர்கள் இருவரும் அடிமை விலங்கை உடைக்க, சமூகநீதியை நிலைநாட்டவும் போராடியவர்கள். சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணிக்கு யாரும் வரவில்லை என்றும், சிறுசிறு கட்சிகளையும் இயக்கங்களையும் இணைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன், இன்றைய நிலையில் தி.மு.க தனித்துப் போட்டியிட்டாலே 200 இடங்களில் வெற்றிபெறும்” என்றார்.

பழ.கருப்பையா பேச எழுந்ததும் பலத்த கைத்தட்டல். “பெரியார் தொடங்கிய இந்த இயக்கத்தில் நான்காவது தலைமுறையாகத் தளபதி இருக்கிறார். அவரால்தான் தமிழகத்தில் நல்லாட்சி தர முடியும். பெரியார் தோன்றியிருக்காவிட்டால் காமராஜர், கலைஞர் ஆகியோர் முதல்வராகி இருக்க முடியாது. ஓர் ஆரியப் பெண்மணி திராவிட சாயம் பூசிக்கொண்டு திராவிடத்தை அழிக்கப்பார்க்கிறார். அதைத் தடுத்து நிறுத்த ஸ்டாலினால்தான் முடியும்” என்றார். பேசி முடித்ததும் ஸ்டாலினும், பழ.கருப்பையாவும் கைகுலுக்கிக்கொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்