பெரியோர்களே... தாய்மார்களே! - 74

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ப.திருமாவேலன்

ட்சி ஆரம்பித்ததுமே இன்று பலருக்கும் முதலமைச்சர் கனவு வந்துவிடுகிறது. இன்னும் சிலருக்கு முதலமைச்சர் கனவு வந்த பிறகுதான் கட்சியே தொடங்கப்படுகிறது. மக்களைப் படித்தோம், மக்களுக்காகப் போராடினோம், மக்களுக்காக வாதாடினோம் என்பதே இல்லாமல் போய்விட்டது இன்று. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டதற்கும் ஆட்சியைப் பிடித்ததற்கும் இடைப்பட்ட 18 ஆண்டு காலம் என்பது ஒவ்வோர் அரசியல்வாதியும் கற்றுக்கொள்ள வேண்டிய பாலபாடம். 18 ஆண்டு காலமும் பாரத யுத்தம்போல் நடத்தியதால்தான் அரியணையில் அண்ணாவால் உட்கார முடிந்தது.

1949 செப்டம்பர் 17-ம் நாள் தி.மு.க தொடங்கப்பட்டது. அதற்கு மறுநாள், திருச்சி நீதிமன்றத்தில் அண்ணாவுக்கு ஆறுமாதம் சிறை என்று தீர்ப்பு வந்தது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவரால் எழுதப்பட்டு, 15 ஆயிரம் பிரதிகள் விற்பனை ஆகிவிட்ட ‘ஆரிய மாயை' என்ற புகழ்பெற்ற புத்தகம், வகுப்பு வேறுபாட்டை விதைப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டது. புத்தகத்தை எழுதிய அண்ணாவுக்கும் அதனை வெளியிட்ட திருச்சி திராவிடப் பண்ணை கண்ணப்பனுக்கும் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதனைக் கட்ட இவர்கள் இருவரும் மறுத்ததால் 4 மாதம் சிறைத் தண்டனையை ஏற்றார்கள். இதைத் தொடர்ந்து தி.மு.க கூட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. நாடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. ‘தடைகளைப் பற்றிக் கவலைப்படாமல் கூட்டம் நடத்துங்கள்’ என்று தி.மு.க தலைமை அறிவித்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்