அ.தி.மு.க-வில் யார் யாருக்கு சீட்?

முட்டிமோதும் பிரமுகர்கள்...

ரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க-வில் யார் யார் சீட் கேட்கிறார்கள்? யார் யாருக்கு வாய்ப்பு என்பது பற்றிய விவரங்களைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். இந்த இதழில்...

திருவள்ளூர் மாவட்டம்

கும்மிடிப்பூண்டி: முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் சக்குபாய், விஜயகுமார் உட்பட பலர் ரேஸில் இருக்கிறார்கள். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் ரவிச்சந்திரனுக்கு சீட் வாய்ப்பு உள்ளது.

பொன்னேரி (தனி): சிட்டிங் எம்.எல்.ஏ-வான பொன் ராஜா, மாவட்டச் செயலாளர் சிறுனியம் பலராமன் ஆகியோர் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்.

திருத்தணி: கடந்த முறை இங்கு வெற்றிபெற்ற தே.மு.தி.க எம்.எல்.ஏ-வான அருண் சுப்பிரமணியன், இப்போது அ.தி.மு.க-வில் இணைந்துவிட்டார். இவர், திருத்தணி தொகுதியைக் கேட்டு வருகிறார். ஒன்றியச் செயலாளர் நரசிம்மன், மாவட்ட கவுன்சிலர் குமார், ஒன்றியக் குழுத் தலைவர் ரவி, ஒன்றிய அவைத்தலைவர் தாண்டவராயன் ஆகியோரும் ரேஸில் இருக்கிறார்கள்.

திருவள்ளூர்: அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட ரமணா, இந்த முறையும் தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். ஜெயலலிதாவின் பாதுகாப்புப் படையில் இருந்த கமாண்டோ பாஸ்கரன், நகரச் செயலாளர் கந்தசாமி ஆகியோரும் கடும் முயற்சியில் இருக்கிறார்கள்.
பூந்தமல்லி (தனி): சிட்டிங் எம்.எல்.ஏ-வான மணிமாறன், தொகுதிச் செயலாளர் ஏழுமலை, அரசு வழக்கறிஞர்கள் சௌந்திரராஜன், அந்தமான் முருகன், ஒன்றியச் செயலாளர் திருநாவுக்கரசு, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொருளாளர் ஜெயவேல், பாரிவாக்கம் வைத்தியநாதன், ஒன்றியத் துணைத் தலைவர் ரவீந்திரநாத் ஆகியோர் ரேஸில் உள்ளனர். இது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், டாக்டர்  அமலதீபாவுக்குக் கிடைக்கலாம்.

ஆவடி: சிட்டிங் எம்.எல்.ஏ-வும், அமைச்சருமான அப்துல்ரஹீம் இந்த முறையும் சீட் கேட்கிறார். முன்னாள் நகரச்செயலாளர் புலவர் சோமுசாவின் மகனும், நகர இளைஞர் அணி துணைச் செயலாளருமான அசன் அலி, பேச்சாளர் ஆவடிகுமார், நகரச் செயலாளர் தீனதயாளன், திருவேற்காடு சீனிவாசன் ஆகியோர் வாய்ப்புக் கேட்டுள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்