யார் என் வேட்பாளர்? - வேட்பாளருக்கான தகுதிகள்...

#WhoisMyCandidate

ட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைத் தயாரிப்பதில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.

அ.தி.மு.க., தி.மு.க., விஜயகாந்த் அணி என அனைத்துக் கூட்டணிகளிலும் இளம் வேட்பாளர்கள், புதுமுகங்கள் களம் இறக்கப்படுவார்கள் என்று பேசப்படுகிறது. வாக்காளர் பட்டியலில் உள்ள இளம் வாக்காளர்களைக் கவரும் வகையில் இளம் வேட்பாளர்கள் என்ற யுக்தியை அரசியல் கட்சிகள் கையில் எடுத்திருக்கின்றன. வாக்காளர் பட்டியலில் புதிதாகச் சேர்ந்துள்ள ஒரு கோடி இளம் வாக்காளர்கள் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இளம் வாக்காளர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் வேட்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்?

வெங்கட் (விவேகானந்தா கல்லூரி): “ஒரு தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருக்க வேண்டும் என்றால், அவர் மக்களுடன் நேரடித் தொடர்புடையவராக இருக்க வேண்டும். போட்டியிடும் நபரின் மீது எந்தக் குற்றமும் இல்லாமல் இருப்பது அவசியம். தவறுகள் இல்லாத தலைவரைத் தேர்ந்தெடுப்பதே மிக முக்கியமான ஒன்று.”

கார்த்திக் (திருத்தங்கல் நாடார் கல்லூரி): ‘‘ஓர் அரசியல் கட்சியைச் சார்ந்து வேட்பாளர் முன்னிறுத்தப்பட்டாலும்கூட, அவர் மக்களின் பிரதிநிதியாக இருக்க வேண்டும் என்பதுதான் என் முதல் எண்ணமாக இருக்கிறது. மக்களுக்கான அரசாங்கம் என்பது மாறி, இப்போது அரசாங்கத்துக்காகத்தான் மக்கள் இருக்கின்றனர் என்ற நிதர்சனம் இங்கே இருக்கிறது. ஒரு வேட்பாளர் சட்டமன்றத்தில் பேசும்போது, தன்னைத் தேர்ந்தெடுக்கும் மக்களுக்காகப் பேச வேண்டும். விவசாயிகளுக்கான திட்டங்கள் குறித்தும், அதில் உள்ள பிரச்னைகள் குறித்தும் பேசக் கூடியவராக இருக்க வேண்டும். ஒரு திட்டத்தைச் செயல்படுத்தினால், அதில் உள்ள நன்மைகள் பற்றி மட்டும் யோசிக்காமல், அதன் விளைவுகள் பற்றியும் சிந்தித்து முடிவெடுக்கும் நபராக இருக்க வேண்டும்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்